அன்றும் இன்றும் முக்கிய நேரத்தில் தவறு செய்த பண்ட் ! இதுக்கு கேப்டனா அவரே இருந்திருக்கலாம்

Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் மே 21-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான 69-ஆவது லீக் போட்டியில் டெல்லியை தோற்கடித்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் ஏற்கனவே வெற்றி வாய்ப்பை இழந்த மும்பை வென்றால் மட்டுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற காரணத்தால் கேப்டன் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி போன்ற் நட்சத்திரங்களும் ரசிகர்களும் மும்பைக்கு முழு ஆதரவை வழங்கினர். அந்த மாபெரும் ஆதரவுடன் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 159/7 ரன்கள் எடுத்தது.

டேவிட் வார்னர் 5 (6) மிட்செல் மார்ஷ் 0 (1) என்ன நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 50/4 என தடுமாறி அந்த அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் 39 (33) ரன்களும் ரோமன் போவல் 43 ரன்களும் அக்ஷர் பட்டேல் 19* (10) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வெளியேறிய டெல்லி:
அதை தொடர்ந்து 160 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா 2 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் இஷான் கிசான் 48 (35) தேவால்டு ப்ரேவிஸ் 37 (33) என அதிரடியான ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் டிம் டேவிட் அதிரடியாக 34 (11) ரன்கள் எடுத்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழக்க அவருடன் திலக் வர்மா 21 (17) ரமந்தீப் சிங் 13* (6) என இளம் வீரர்கள் அதிரடி காட்டியதால் 19.1 ஓவரில் 160/5 ரன்கள் எடுத்த மும்பை வெற்றி பெற்று பெங்களூருவை பிளே ஆப் சுற்றில் நுழைய மாபெரும் உதவி செய்தது.

RCB Celebrations Virat Kohi Glenn Maxwell

அதனால் விராட் கோலி உட்பட முக்கிய வீரர்களும் பெங்களூர் அணி நிர்வாகமும் வெளிப்படையாகவே மும்பைக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் இந்த போட்டியில் வென்றால் தாராளமாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் கையில் கிடைத்த நல்ல வாய்ப்பை தவறவிட்டு லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று அந்த அணியின் கனவும் உடைந்தது.

- Advertisement -

பண்ட் தவறு:
முன்னதாக இப்போட்டியில் 95/3 என்ற நிலைமையால் டெல்லி வெற்றி பெறுவதற்கு நல்ல நிலைமை ஏற்பட்ட போது களமிறங்கிய டிம் டேவிட் 0 ரன்களில் இருந்தபோது ஷர்டுள் தாகூர் வீசிய பந்தில் எட்ஜ் வாங்கினார். அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் அம்பயரிடம் அவுட் கேட்டும் அவர் கொடுக்காத நிலையில் ரிவ்யூ எடுக்காமல் விட்டது தோல்வியை பரிசளித்தது. அந்த தருணத்தில் தாக்கூர் உட்பட இதர வீரர்களிடம் ஆலோசனை கேட்ட போதும் அவர் உறுதியாக தெரியவில்லை எனக்கூறியதால் ரிவியூ எடுக்கவில்லை என்று போட்டி முடிந்த பின்னர் பண்ட் கூறினார். ஆனால் பேட்ஸ்மேனுக்கு பின்னாடி நின்று அந்த பந்தை பிடித்த அவர் தான் கேப்டனாக முன் நின்று ரிவ்யூ செய்திருக்க வேண்டும்.

david 1

அதை செய்யாமல் தவறு செய்த அவர் டெல்லியின் தோல்விக்கு முக்கிய காரணமானார். இப்படி அவர் சொதப்புவது இது முதல் முறையல்ல. ஆம் கடந்த 2021 தொடரில் அவர் தலைமையில் லீக் சுற்றில் அசத்திய டெல்லி பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் சென்னையை எதிர்கொண்டு முதலில் பேட்டிங் செய்து 172/5 ரன்கள் எடுத்தது. அதை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் 70 (50) உத்தப்பா 63 (44) ரன்களை எடுக்க கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது தென் ஆப்பிரிக்காவின் தரமான நட்சத்திர பவுலர் ககிசோ ரபடாவை பந்துவீச கொடுக்காத ரிஷப் பண்ட் இங்கிலாந்தின் சுமாரான டாம் கரனிடம் கொடுத்தார். அதில் 3 பவுண்டரி தெறிக்கவிட்ட எம்எஸ் தோனி சென்னையை பைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

ஷ்ரேயஸ் ஐயர்:
அந்த நாளில் ரபாடாவுக்கு அந்த கடைசி ஓவரை பண்ட் கொடுக்காதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி பெரிய கேள்வி எழுப்பியது. அந்த நிலையில் அதே போன்ற தவறை மீண்டும் செய்துள்ள அவர் சிறந்த அதிரடியான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றாலும் கேப்டன்சிப் பொறுப்புக்கு செட்டாக மாட்டார் என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறுகின்றனர்.

MIvsDC

- Advertisement -

மேலும் 2008 முதல் சேவாக், கம்பீர் போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் ஜொலிக்க முடியாத டெல்லியை 2019இல் கேப்டனாக செயல்பட்ட முதல் வருடத்திலேயே தனது அபார கேப்டன்ஷிப் திறமையால் ஸ்ரேயாஸ் அய்யர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட அவர் 2020இல் பாதியில் காயமடைந்து விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடருக்கான டி20 இந்திய அணியில் அவரை ஏன் சேக்கல – சுரேஷ் ரெய்னா கேள்வி

அதன்பின் 2021இல் குணமடைந்து திரும்பிய போதிலும் ஷ்ரேயஸ் ஐயரிடம் பொறுப்பை ஒப்படைக்காத டெல்லி நிர்வாகம் பண்ட்க்கு தொடர்ந்து கேப்டனாக ஆதரவு கொடுத்து அவரை 2022இல் கழற்றிவிட்டது. அந்த வகையில் ஷ்ரேயஸ் ஐயர் சிறந்த கேப்டன் எனக்கூறும் பெரும்பாலான ரசிகர்கள் அவரை டெல்லி தவற விட்டு விட்டதாக பேசுகின்றனர்.

Advertisement