தென்னாப்பிரிக்க தொடருக்கான டி20 இந்திய அணியில் அவரை ஏன் சேக்கல – சுரேஷ் ரெய்னா கேள்வி

Raina-2
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது வருகிற 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Team

- Advertisement -

அந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரரான கே.எல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோன்று இந்திய அணியில் இருந்து சற்று ஓரங்கட்டப்பட்ட வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். அந்த வகையில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக தனது அட்டகாசமான பினிஷிங் திறமையை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக்-க்கு 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

Shikar Dhawan

இந்நிலையில் இப்படி ஒருபுறம் இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் மறுபுறம் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஷிகர் தவானை அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது :

- Advertisement -

ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருக்க வேண்டும். ஏனெனில் ஷிகர் தவான் தற்போதும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பான வீரர்தான். அதேபோல் அவர் அணியில் இருக்கும் போது மற்ற வீரர்களுக்கும் அது உத்வேகத்தை கொடுக்கும். ஷிகார் தவான் தன்னை சுற்றியுள்ள வீரர்களை எப்போதுமே மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்.

இதையும் படிங்க : மும்பை ஜெர்ஸிய போட்டுக்கிட்டு சப்போர்ட் கேட்டாங்க, மறுக்க முடில – பின்னணியை பகிரும் வெற்றி வீரர்

இந்த ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக் வாய்ப்பு கொடுக்க முடியும் என்றால் ஷிகார் தவானுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை? அவரும் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாகவே ஆடியுள்ளார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement