இது எப்படி அவுட்டாகும்? ஆதாரத்துடன் அம்பயரின் வண்டவாலத்தை அம்பலமாக்கிய வாசிம் ஜாபர் – கொதிக்கும் ரசிகர்கள்

Stumping
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. குறிப்பாக அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் வலுவான அணியாக திகழும் இந்தியாவுக்கு கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் சவால் கொடுக்க நியூசிலாந்து அணி வந்துள்ளது. அந்த நிலையில் ஜனவரி 18ஆம் தேதியன்று ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 34 (38) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த விராட் கோலி 8 ரன்னிலும் இஷான் கிசான் 5 ரன்னிலும் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்று அதிரடியாக செயல்பட்டு விரைவாக அரை சதம் கடந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லுடன் அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாட முயன்ற சூரியகுமார் யாதவ் 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 31 (26) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

என்னப்பா அம்பயர்:
அந்த நிலைமையில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் சதமடித்து விரைவாக ரன்களை சேர்த்தார். அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய இந்த ஜோடியில் ஹர்டிக் பாண்டியா 28 (38) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் சதமடித்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்த சுப்மன் கில் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதமடித்து 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் இந்தியா 349/8 ரன்கள் குவித்து அசத்தியது.

முன்னதாக இப்போட்டியில் நன்கு செட்டிலான ஹர்திக் பாண்டியா 3வது நடுவரின் தவறான தீர்ப்பால் அவுட்டானது இந்தியா 400 ரன்கள் குவிக்கும் வாய்ப்பை பறித்தது என்று சொல்லலாம். ஏனெனில் டார்ல் மிட்சேல் வீசிய 40வது ஓவரின் 5வது பந்தை அதிரடியாக எதிர்கொண்ட பாண்டியா தவற விட்டார். நேராக அந்த பந்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் கைகளில் தஞ்சமடைந்த போது ஸ்டம்ப்பில் மோதியதால் நியூசிலாந்து அணியினர் அவுட் கேட்டார்கள்.

- Advertisement -

அதை சோதித்த 3வது நடுவர் பந்து டாம் லாதம் கைகளில் சேரும் போது பெய்ல்ஸ் எடுக்கப்பட்டதாக ஒளி விளக்குகள் எரிந்ததை ஆதாரமாக வைத்து போல்ட்டானதாக அவுட் கொடுத்தது ஹர்திக் பாண்டியாவையும் இந்திய ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் ஸ்டம்ப்பில் உள்ள ஒளி விளக்குகள் எறிவதற்கு முன்பாகவே பந்து டாம் லாதம் கைகளில் தஞ்சமடைந்தது. அப்போது பந்துக்கும் பெய்ல்ஸ்க்கும் நல்ல இடைவெளி இருந்தது ரிப்ளையில் தெளிவாகத் தெரிந்தது.

அதே சமயம் பந்து டாம் லாதம் கைக்குள் இருந்த போது பெய்ல்ஸ் நீக்கப்படவில்லை. மேலும் பந்து ஸ்டம்பில் மோதாமல் அவரது கைக்கு சென்ற பின்பே ஸ்டம்ப்பின் ஒளி விளக்குகள் எரிந்தன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது எப்படி அவுட்டாகும் என இந்திய ரசிகர்கள் 3வது நடுவரை சரமாரியாக விமர்சிக்கிறார்கள். இதை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் படிப்படியாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டு 3வது நடுவரின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தியுள்ளார். அதே போல் அடுத்த சில ஓவர்களிலேயே சுப்மன் கில் தவறவிட்ட ஒரு பந்தை கையில் பிடிப்பதற்கு முன்பே டாம் லதம் அதே போல் தனது கைகளை ஸ்டம்பில் மோதி அவுட் கேட்டார்.

இதையும் படிங்க: IND vs NZ : சேவாக் போல ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை தெறிக்க விட்ட சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

அப்போது பந்துக்கும் ஸ்டம்புகளுக்கும் ஒரு அடிக்கு மேல் இடைவெளி இருந்ததால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட அதே தருணம் தான் ஹர்திக் பாண்டியா தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் நிகழ்ந்தது. அதை சுட்டிக்காட்டிய தமிழக வீர அஷ்வின் பாண்டியா நிச்சயமாக அவுட்டில்லை என்று தனது ட்விட்டரில் நடுவரை சாடியுள்ளார்.

Advertisement