IND vs NZ : சேவாக் போல ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை தெறிக்க விட்ட சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த நியூசிலாந்து இந்தியாவையும் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அந்த நிலைமையில் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 18ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து வழக்கம் போல பவுண்டரிகளை பறக்க விட்டு சுப்மன் கில்லுடன் 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 34 (38) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இசான் கிசான் கடைசியாக இரட்டை சதமடித்த வேகத்தை போல் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடவலாக செயல்பட்டு 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

கலக்கிய கில்:
அதனால் 110/3 என தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் நங்கூரமாக நின்ற சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து அசத்திய நிலையில் அவருடன் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு அசத்திய சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரியுடன் 31 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியில் சதமடித்து நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் அதே வேகத்துடன் இப்போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்த சதங்களை விளாசி அசத்தினார்.

அவருடன் அடுத்ததாக களமிறங்கி அதிரடியாக விளையாடும் முயன்ற ஹர்திக் பாண்டியா 28 (33) ரன்களில் அவுட்டானாலும் 5வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தார். அந்த நிலையில் வந்த வாஷிங்டன் சுந்தர் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் நேரம் செல்ல செல்ல நன்கு செட்டிலாகி நியூசிலாந்து பவுலர்களை பந்தாடிய சுப்மன் கில் 150 ரன்களை கடந்து இரட்டை சதத்தை நெருங்கிய போது அதற்கு வழி விடும் வகையில் தவறாக ஓடிய சார்துல் தாகூர் 3 ரன்னில் ரன் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதத்தை நெருங்கி 182 ரன்களில் இருந்த போது நியூசிலாந்தின் அதிவேக பந்து வீச்சார்களில் ஒருவரான லாக்கி பெர்குசன் வீசிய 49வது ஓவரில் சேவாக் போல பயப்படாமல் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை தெறிக்க விட்டு ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை அடித்து சாதனை படைத்தார். அது வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிசான் ஆகியோருக்குப் பின் இரட்டை சதமடித்த 5வது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்தார்.

அதை விட ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் இரட்டை சதமடித்த வீரர் என்ற இஷான் கிசான் சாதனையை ஒரு மாதத்தில் தூளாக்கிய அவர் புதிய உலக சாதனைப் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சுப்மன் கில் : 23 வருடம் 132 நாட்கள், நியூசிலாந்துக்கு எதிராக, ஹைதெராபாத், 2023*
2. இஷான் கிசான் : 24 வருடம் 145 நாட்கள், வங்கதேசத்துக்கு எதிராக, சட்டோகிராம், 2022
3. ரோகித் சர்மா : 26 வருடம் 186 நாட்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரு, 2013

இதையும் படிங்க: IND vs NZ : ஹாட்ரிக் சிக்ஸர்களுடன் இரட்டை சதத்தை தெறிக்க விட்ட சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை

அப்படி இரட்டை சதம்டித்து சாதனை படைத்த அவர் ஒரு வழியாக 19 பவுண்டரி 9 சிக்ஸருடன் 208 (149) ரன்களை விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 349/8 ரன்கள் குவித்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் மற்றும் ஷிப்லே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement