- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்க திட்டம் 30 வருஷமா இருக்கனும். அபிஷேக்கை நேராக பாராட்டிய ஜாம்பவான் வாசிம் அக்ரம்.. எளிய ஆலோசனை

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் அவர் ஹைதராபாத் அணிக்காக துவக்க வீரராக அசத்தி வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டுக்கு சமமாக அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே டக் அவுட்டான அவர் அடுத்தப் போட்டியிலேயே சதத்தை அடித்து அசத்தினார். அதன் பின் தென்னாபிரிக்கா, வங்கதேசம் தொடர்களில் கணிசமாக அசத்திய அபிஷேக் ஷர்மா கடந்த இங்கிலாந்து தொடரில் மிகச் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய அவர் சதத்தை விளாசி 135 (54) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஜாம்பவான் பாராட்டு:

அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக அவர் சாதனை படைத்தார். மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரசித் போன்ற தரமான இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் 13 சிக்ஸர்களையும் பறக்க விட்டு சாதனைகளை புரிந்தார். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெற்றது.

அந்தப் போட்டியை அபிஷேக் சர்மா துபாய் மைதானத்திற்கு சென்று நேரடியாக கண்டு களித்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்போது மும்பையில் இங்கிலாந்தை நீங்கள் வெளுத்து வாங்கிய ஆட்டத்தை தாம் பார்த்ததாக வாசிம் அக்ரம் அவரை பாராட்டினார்.

- Advertisement -

30 வருடங்கள் கேரியர்:

மேலும் இங்கிருந்து அடுத்த 30 வருடங்கள் அசத்தும் அளவுக்கு திட்டங்களை வகுத்து உழைக்குமாறும் அவர் ஆலோசனை தெரிவித்தார். இது பற்றி வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “நான் அந்த இன்னிங்ஸை பார்த்தேன். அது அற்புதமானது. இப்படியே தொடர்ந்து விளையாடுங்கள். இது வெறும் ஆரம்பம் மட்டுமே. நீங்கள் 30 வருடங்கள் இதைத் தொடர வேண்டும்”

இதையும் படிங்க: தோனியால் கூட பாகிஸ்தானை காப்பாத்த முடியாதுன்னு அப்போவே தெரியும்.. காரணம் இது தான்.. சனா மிர் விளாசல்

“எனவே அதற்குத் தேவையான விஷயங்களில் உங்களுடைய தலையை குனிந்து கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்று சொல்லி கை கொடுத்து அபிஷேக் சர்மாவை நேராக பாராட்டி வாழ்த்தினார். அதை பணிவுடன் அபிஷேக் கேட்டுக் கொண்டார். இதை அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -