சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் சார்பாக தற்போது நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்திருந்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாடி வருகின்றன. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் இந்த தொடரானது கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கிய நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடையவுள்ள வேளையில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன.
என் வாழ்நாளில் இதுபோன்ற நிகழ்வை பார்த்ததில்லை : வாசிம் அக்ரம்
இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு பின்னர் குரூப் பி பிரிவிலிருந்து எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது தெரியவந்துவிடும். இந்த தொடரில் பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணிக்கவில்லை. எனவே இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த அணி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி பிரபலங்கள் பலரது மத்தியிலும் பெரியளவு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி அடைந்த இந்த தோல்வி குறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் கூறுகையில் : பாகிஸ்தான் ஒருநாள் அணியை முற்றிலுமாக மாற்றியாக வேண்டும்.
துடிப்பான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வாருங்கள். இந்த அணிக்குள் 6 மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் அந்த மாற்றங்களை தயங்காமல் செய்யுங்கள். பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் தான் தற்போது முக்கியம். கடந்த 5 ஒருநாள் போட்டிகளில் நாம் 24 விக்கெடுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளோம். இதுபோன்ற ஒரு மோசமான சராசரியை நான் பார்த்ததே கிடையாது.
இதையும் படிங்க : இந்தியா ஈஸியா ஜெய்க்க ஐசிசியே பாகிஸ்தானை வெச்சு.. சாதகம் பண்ணிட்டாங்க.. நாசர் ஹுசைன், ஆதர்டன் விமர்சனம்
ஓமன், அமெரிக்க அணிகளை காட்டிலும் பாகிஸ்தான் தற்போது மோசமான நிலையில் உள்ளது. கடந்த போட்டி துவங்கிய போது 15-வது ஓவரிலேயே பாகிஸ்தான் ரசிகர்கள் மைதானத்திலிருந்து வெளியேறியதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு மோசமான நிகழ்வை பார்த்ததே கிடையாது. அந்த அளவிற்கு தற்போது பாகிஸ்தான் பின்தங்கியுள்ளது என வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



