முடிஞ்சா என்கிட்ட பேசுங்க. அர்ஷ்தீப் சிங்கிற்காக வரிந்து கட்டி சப்போர்டுக்கு நிற்கும் வாசிம் அக்ரம் – நடந்தது என்ன?

Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்று போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தாலும் சூப்பர் ஃபோர் சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது பல்வேறு விமர்சனங்களை இந்திய அணிக்கு பெற்றுத்தந்தது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கியமான போட்டியில் விறுவிறுப்பான கட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் கொடுத்த கேச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் மீது படு மோசமான விமர்சனங்கள் எழுந்தன.

Arshdeep-Singh

அந்த போட்டி முடிந்ததும் சமூக வலைதளம் முழுவதுமே அவரை மட்டுமே சுற்றியபடி பல்வேறு சர்ச்சைகளும் எழும்பின. அந்த விடயம் அப்போது இந்தியா முழுவதுமே பேசப்படும் அளவிற்கு பெரிய விடயமாக மாறியது. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் கொந்தளித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சமூக வலைதளத்தில் யாரேனும் யாரையாவது டார்கெட் செய்ய வேண்டும் என்று நினைத்தால் என்னை குறி வைத்து பேசுங்கள். நீங்கள் என்னை விமர்சித்தால் நான் உங்களை விட பத்து மடங்கு அதிகமாக ஆத்திரம் கொள்வேன். என்னிடம் நன்றாக பேசினால் நன்றாக பேசுவேன்.

Arshdeep Singh

அதை விடுத்து ஒரு இளம் வீரரிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள். அது முறையானதும் கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு நாட்டிற்காக விளையாடும் வீரருக்கு நாம் உரிய ஆதரவினை வழங்க வேண்டும்.

- Advertisement -

கிரிக்கெட் போட்டி என்பது அழுத்தம் நிறைந்த ஒன்று. அந்த களத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இப்படி ஒரு இளம் வீரருக்கு சோகத்தை கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : சுமாராக செயல்பட்டு கழற்றி விடப்பட்ட வீரரை மனசாட்சியின்றி தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டும் வங்கதேச கோச்

ஒரு கேட்சை விட்டதனால் அவரை விமர்சிப்பது தவறு. அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறக்கூடிய திறமை உள்ளவர். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் வரை இந்திய அணிக்காக அவர் சிறப்பான செயல்பாட்டை அளிப்பார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என வாசிம் அக்ரம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement