சுமாராக செயல்பட்டு கழற்றி விடப்பட்ட வீரரை மனசாட்சியின்றி தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டும் வங்கதேச கோச்

bangladesh
- Advertisement -

நடைபெற்று முடிந்த 2022 ஆசிய கோப்பையில் நடப்புச் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வலுவான அணியை தோற்கடித்த இலங்கை யாருமே எதிர்பாராத வகையில் இளம் வீரர்களை வைத்து கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் தற்சமயத்தில் கிட்டத்தட்ட இலங்கையை போலவே தடுமாறும் அணியாக கருதப்படும் வங்கதேசம் இந்த தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் லீக் சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து முதல் அணியாக வெளியேறியது. ஆரம்ப காலம் முதல் இப்போது வரை தடுமாறி வரும் அந்த அணிக்கு இந்த தொடருக்கு முன்பாக திடீரென்று நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

அவரது தலைமையில் லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோற்ற அந்த அணி இலங்கைக்கு எதிராக வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா போட்டியில் களமிறங்கியது. ஆனால் அப்போட்டிக்கு முன்பாக இலங்கை அணியில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் யாருமே இல்லாததால் நாங்கள் எளிதாக வெல்வோம் என்று வாய்விட்டு வம்பிழுத்த வங்கதேசம் கடைசியில் படுதோல்வியை சந்தித்து முதல் அணியாக வெளியேறியது. அதனால் வழக்கம் போல ஏராளமான ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து சமூக வலைதளங்களில் வெறித்தனமாக வங்கதேசத்தை கலாய்த்தனர்.

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட மஹமதுல்லா:
இந்நிலையில் படுதோல்வியை சந்தித்த வங்கதேசம் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கான அணியை அறிவித்துள்ளது. ஷாகிப் அல் ஹசன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் லிட்டன் தாஸ், முஸ்தபிசுர் ரஹ்மான் போன்ற முக்கிய வீரர்கள் இடம் பிடித்துள்ள நிலையில் சமீபத்திய ஆசிய கோப்பையில் சுமாராக செயல்பட்டு தோல்விக்கு காரணமாக அமைந்த சீனியர் வீரர் மஹமதுல்லா அதிரடியாக நீக்கப்பட்டார்.

கடந்த 2007 முதல் வங்கதேசத்துக்காக விளையாடியுள்ள அவர் 115 போட்டிகளில் 2002 ரன்களை 23.83 என்ற சுமாரான சராசரியில் 117.18 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இருப்பினும் அவருடைய அனுபவத்தை மதித்து ஆசிய கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மீண்டும் சுமாராக செயல்பட்ட அவர் 36 வயது கடந்து விட்டதால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உலகக்கோப்பையில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

தோனியுடன் ஒப்பீடு:
ஆனால் கடந்த பல வருடங்களாக வங்கதேச அணியின் மிடில் ஆர்டரில் இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனியை போல் மகமதுல்லா செயல்பட்டதாக வங்கதேசப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியுள்ளார். என்னதான் ஜாம்பவனாக இருந்தாலும் தோனி காலம் முழுவதும் விளையாட முடியாது என்பதை போல் மஹமதுல்லாவுக்கும் தற்போது விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஒவ்வொரு வீரருக்கும் அடுத்த தலைமுறை வீரரை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். எனவே மகமதுல்லா இடத்தில் செயல்படக்கூடிய ஒருவரை கண்டுபிடிக்க இதுவே சரியான நேரமாகும். ஒருவேளை புதிய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் நாங்கள் எந்த மாற்றத்தையும் காண மாட்டோம். மேலும் நான் எப்போதும் மகமதுல்லாவை அவர் செயல்பட்ட விதத்தை வைத்து தோனியுடன் ஒப்பிடுவேன். ஏனெனில் இந்தியாவுக்காக தோனி 6வது இடத்தில் விளையாடியது போல இவரும் சிறப்பாக விளையாடினார். அவரைப்போலவே இவரும் வங்கதேசத்துக்காக நிறைய போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்தவர். ஆனால் தோனி காலத்திற்கும் விளையாட முடியாது சரி தானே?” என்று கூறினார்.

- Advertisement -

முன்னாள் இந்திய வீரரான இவர் வங்கதேச பயிற்சியாளராக செயல்படுகிறார் என்பதற்காக சுமாராக செயல்பட்டு 36 வயதில் கழற்றி விடப்பட்ட வங்கதேச வீரரை தோனியுடன் ஒப்பிடுவது நிறைய இந்திய ரசிகர்களின் புருவத்தை உயர்த்துகிறது. ஏனெனில் 40 வயது கடந்த இப்போதும் சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஒரு சில போட்டிகளில் அட்டகாசமாக பினிஷிங் செய்த தோனி உலகத்தரம் வாய்ந்த ஜாம்பவனாக போற்றப்படுகிறார். அதனால் ஒப்பீடு செய்வது என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று இந்திய ரசிகர்கள் கேட்கின்றனர்.

இதையும் படிங்க : ரவி சாஸ்திரி சாதித்ததை போல இம்முறை இவர் இந்திய அணிக்காக சாதிப்பார் – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட வங்கதேச அணி இதோ:
ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), சபீர் ரஹ்மான், மெஹந்தி ஹசன் மிரஸ், அபிப் ஹொசைன், மொசாதிக் ஹூசைன், லிட்டன் தாஸ், யாஸர் அலி, நூறுள் ஹசன், முஸ்தபிசுர் ரஹ்மான், சாய்புதின், டஸ்கின் அஹமது, எபோதத் ஹொசைன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹொசைன், நசும் அஹமத்

Advertisement