2 வருசமாச்சு.. தினமும் அதை 8 கிலோ சாப்பிட்டா எப்டி ஜெயிக்க முடியும்? பாகிஸ்தானை விளாசிய வாசிம் அக்ரம்

Wasim Akram 8
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா சபிக் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3, நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஆப்கானிஸ்தானுக்கு ரஹமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஜாட்ரான் 87 ரன்கள் விளாசி 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வலுவான அடித்தளத்தை கொடுத்தனர் அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ரஹ்மத் ஷா 77*, கேப்டன் ஷாகிதி 48* ரன்கள் எடுத்து 49 ஓவரில் ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

நல்லா சாப்பிடுங்க:
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக சரித்திர வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் சாதனை படைத்தது. இந்நிலையில் தினம்தோறும் 8 கிலோ மட்டன் சாப்பிட்டால் எப்படி ஃபிட்டாக இருந்து வெற்றி காண முடியும் என்று பாகிஸ்தான் வீரர்களை முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்றைய செயல்பாடுகள் அவமானமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் 2 விக்கெட்கள் மட்டும் இழந்து 280+ ரன்கள் எடுப்பது மிகவும் பெரியதாகும். மைதானம் ஈரமாக இல்லை. ஆனால் ஃபிட்னஸ் மற்றும் ஃபீல்டிங் லெவலை பாருங்கள். பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 2 வருடங்களாக எவ்விதமான ஃபிட்னஸ் சோதனைக்கும் செல்லவில்லை என்பதை கடந்த 3 வாரங்களாக நாங்கள் சொல்லி வருகிறோம்”

- Advertisement -

“இது பற்றி நான் தனிநபர் வீரர்களின் பெயரை குறிப்பிட்டால் அது நன்றாக இருக்காது. தற்போதைக்கு இந்த வீரர்கள் தினம்தோறும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவது போல் தெளிவாக தெரிகிறது. கிரிக்கெட்டில் விளையாடும் நீங்கள் சம்பளத்துடன் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். எனவே சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். மிஸ்பா பயிற்சியாளராக இருந்த போது அந்த வரைமுறையை வைத்திருந்தார்”

இதையும் படிங்க: 10-12 வருட காத்திருப்பு.. 3 மாச கடின உழைப்பு.. இப்போ இங்க நிக்குறது பெருமையா இருக்கு – முகமது நபி உருக்கம்

“ஆனால் நம்முடைய வீரர்கள் அவரை வெறுத்தனர். பொதுவாக ஃபீல்டிங் என்பது ஃபிட்னஸ் பொறுத்தது ஆனால் அதில் நாம் தடுமாறுகிறோம்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்து வரும் போட்டிகளில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement