பும்ராவிடம் இப்படியா மாட்டுவீங்க.. பாகிஸ்தான் அணியை கலைய்ச்சு அங்க உட்கார வெங்க.. வாசிம் அக்ரம்

Wasim Akram 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமது ரிஷ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் பயிற்சியாளர் குழுவை மட்டும் வைத்து விட்டு மொத்த பாகிஸ்தான் அணியும் கலைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

டீமை கலைங்க:
அத்துடன் பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு ஒற்றுமையாகவும் விளையாடவில்லை என்றும் அவர் சாடியுள்ளார். எனவே இது போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் வீட்டில் உட்கார வைக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“அவர்கள் 10 வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் நான் எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ரிஸ்வானுக்கு போட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லை. விக்கெட்டுகளை எடுப்பதற்காக பும்ராவின் கையில் பந்து கொடுக்கப்பட்டுள்ளது என்பது அவருக்கு நன்றாக தெரியும். அது போன்ற சூழ்நிலையில் அவர் கொஞ்சம் கவனத்துடன் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல் பெரிய ஷாட் அடிக்க முயற்சித்த அவர் விக்கெட்டை இழந்தார்”

- Advertisement -

“இப்திகார் அகமது நீண்ட நாட்களாக இந்த அணியில் இருக்கிறார். ஆனால் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. அதே போல பகார் ஜமானுக்கு போட்டியை பற்றிய விழிப்புணர்வை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. சிறப்பாக செயல்படவில்லையெனில் பயிற்சியாளர்கள் நீக்கப்படுவார்களே தவிர நமக்கு எதுவும் ஆகாது என்று பாகிஸ்தான் வீரர்கள் நினைக்கின்றனர்”

இதையும் படிங்க: வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகாதது ஏன்? அபிஷேக் நாயர் கொடுத்த விளக்கம் – விவரம் இதோ

“எனவே இது பயிற்சியாளர்களை மட்டும் வைத்து விட்டு மொத்த அணியையும் மாற்ற வேண்டிய நேரமாகும். இந்த அணியில் 2 வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுடைய நாட்டுக்காக விளையாடுகின்றனர். எனவே அது போன்ற வீரர்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும்” என்று கூறினார். இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement