வருண் சக்ரவர்த்தி இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகாதது ஏன்? அபிஷேக் நாயர் கொடுத்த விளக்கம் – விவரம் இதோ

Varun
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். கடந்த 2021-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 6 டி20 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இப்படி இந்திய அணிக்காக அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிமுகமாகி இருந்தாலும் அதற்கடுத்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமலே இருந்து வருகிறது. கடந்த இரண்டு ஐபிஎல் தொடராகவே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்று ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

ஏனெனில் ஒரு சில வீரர்கள் ஒரு சில ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி விட்டாலே இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் வேளையில் தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் அசத்தும் அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடிக்காததுக்கு என்ன காரணம்? என்பது குறித்து கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளரான அபிஷேக் நாயர் சில முக்கிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக தான் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் அவரிடம் ஒருமுறை பேட்டிங் மற்றும் பீல்டிங்கை மேம்படுத்துமாறு கூறியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி பெரும்பாலும் கடைசி கட்டத்தில் தான் களமிறங்குவார் என்பதனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனாலும் அவரிடம் இருந்து பேட்டிங்கை எதிர்பார்க்கிறார்கள். அதேபோன்று பீல்டிங்கில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் மிக சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

இதையும் படிங்க : பணத்துக்காக ஆடுவாரு.. கேரியர் முடிஞ்சுன்னு சொன்னாங்க.. இந்தியாவுக்காக இப்படி தான் கம்பேக் கொடுத்தேன்.. பும்ரா பேட்டி

இப்படி இந்த இரண்டு விடயங்களால் தான் அவரை இந்திய அணியில் தொடர்ந்து தேர்வு செய்யவில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் வருண் சக்கரவர்த்தி தற்போது மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். விரைவில் அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே எனக்கும் ஆசை என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement