ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியது. நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 43, அக்சர் பட்டேல் 20 ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தானை அதிரடியாக விளையாட முடியாமல் இந்திய பவுலர்கள் மடக்கிப் பிடித்தனர். அதனால் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கட்டுகளை எடுத்தனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இந்தியா சாதனையும் படைத்தது.
பும்ராவின் கம்பேக்:
இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் கடந்த சில வருடத்திற்கு முன் காயமடைந்த போது தம்முடைய கேரியர் முடிந்து விட்டது என்று பலரும் பேசியதாக பும்ரா தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்ததையும் பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்தது பற்றி இப்போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இதே மக்கள் ஒரு வருடத்திற்கு முன்பாக நான் மீண்டும் விளையாட மாட்டேன் என்று சொன்னார்கள். என்னுடைய கேரியர் முடிந்து விட்டதாகவும் பேசினார்கள். ஆனால் தற்போது அந்தக் கேள்விகள் மாறியுள்ளது. ஆனால் அதை நான் பார்க்கவில்லை”
“நான் என்னுடைய திறனை வைத்து சிறப்பாக பந்து வீச முயற்சிக்கிறேன். என் முன் இருக்கும் பிரச்சினைகளை மட்டும் பார்த்து கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். இது அனைவரும் சொல்வது போன்ற சாதாரண பதிலாக இருக்கலாம். ஆனால் இது போன்ற மைதானங்களில் எப்படி பந்து வீசலாம் என்பதில் நான் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்”
இதையும் படிங்க: அதை கேட்டதும் கண் கலங்கிட்டேன்.. விருதை வழங்கி ரிஷப் பண்ட்டை பாராட்டிய.. ரவி சாஸ்திரி உருக்கம்
“ஷாட்டுகள் அடிப்பதை எப்படி கடினப்படுத்த முடியும்? எனக்கு என்ன சிறந்த வாய்ப்புகள் இருக்கிறது? என்பதை பார்க்கிறேன். அதனாலயே நான் நிகழ்காலத்தில் மட்டும் இருந்து என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துகிறேன். ஏனெனில் வெளிப்புறத்தில் மக்கள் கொடுக்கும் விமர்சனங்களை நான் பார்த்தால் அதிகமான உணர்ச்சிகளை சந்தித்து என்னால் முடியாததை செய்ய முயற்சிப்பேன். எனவே விமர்சனங்களை பார்க்காமல் எனக்கென்று ஒரு வளையத்தை உருவாக்கி முன்னோக்கி செல்வதற்கு முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.