அதை கேட்டதும் கண் கலங்கிட்டேன்.. விருதை வழங்கி ரிஷப் பண்ட்டை பாராட்டிய.. ரவி சாஸ்திரி உருக்கம்

Ravi Shastri 2
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 120 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பாகிஸ்தானை ஆரம்பம் முதலே துல்லியமாக பந்து வீசிய இந்தியா 20 ஓவரில் 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அதனால் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ரவி சாஸ்திரி உருக்கம்:
அதே போல சவாலான பிட்ச்சில் அற்புதமாக பேட்டிங் செய்த ரிசப் பண்ட் 41 ரன்கள் எடுத்ததுடன் 3 கேட்ச்களை பிடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதற்காக இப்போட்டிக்கான சிறந்த ஃபீல்டர் என்ற ஸ்பெஷல் விருதை இந்திய அணி நிர்வாகம் பரிசாக வழங்கியது. அதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு வழங்கினார்.

அப்போது விபத்து செய்தியை கேட்டு கண் கலங்கியதாக தெரிவித்த ரவி சாஸ்திரி அங்கிருந்து அபார கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்டை உருக்கத்துடன் வாழ்த்தி பாராட்டினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது என்னுடைய கண்கள் கலங்கின”

- Advertisement -

“அவரை மருத்துவமனையில் பார்த்த போது நிலைமையும் மேலும் மோசமானது. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா – பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது இதயத்தை தொடுகிறது. அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது”

இதையும் படிங்க: 3 ரன் பரவால்ல.. ஆனா இதை ஏத்துக்கவே முடியாது.. துபேவுக்கு பதில் ரிங்குவை கொண்டுவாங்க.. ரசிகர்கள் விளாசல்

“ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. துன்பத்திலிருந்து மரணத்தின் தாடைகளில் இருந்து வந்த நீங்கள் ஒரு வெற்றியை பறிக்கலாம் மிகவும் நல்லது. இந்த வேலையை தொடருங்கள்” என்று கூறினார். அந்த விருதை சாஸ்திரி வழங்கியதும் இந்திய வீரர்கள் அவருக்கு கைதட்

Advertisement