சேவாக் என்னங்க விளையாடுறாரு இவரை விட அவர் கம்மிதான் – வாசிம் அக்ரம் சர்ச்சை பேட்டி

Akram
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டின் மரபை உடைத்து புதிய உத்திகளைப் புகுத்தியவர் நிறைந்த சேவாக் இல்லை. பாகிஸ்தான் வீரர் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் வாசிம் அக்ரம்.

Sehwag 1

- Advertisement -

பாகிஸ்தானின் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சாகித் அப்ரிடி மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் பேசியதாவது : முன்னொரு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே நிதானமாக விளையாட வேண்டும்.

ஆனால் இந்த மரபுகளை உடைத்து அதிரடியாக ஆடியவர் விரேந்தர் சேவாக்கா? இல்லை சாகித் அப்ரிடியா? என்ற பேச்சு எழுந்தது. இதற்கு பதிலளித்த வாசிம் அக்ரம் கூறுகையில் : விரேந்தர் சேவாக் தற்போது வந்தவர். ஆனால் எங்கள் நாட்டை சேர்ந்த சாகித் அப்ரிடியா 1999 ஆம் ஆண்டிலேயே வந்துவிட்டார்.

afridi

துவக்க வீரராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடி ஆட்டத்தை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். இந்த காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிரடியான ஆட்டத்தை காட்டியது வார்னர் என்றும் கூறி வருகின்றனர். இந்த இருவர்தான் பந்துவீச்சாளர்களுக்கு கடினமான காலத்தை ஏற்படுத்தியது என்ற கருத்தெல்லாம் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக சாகித் அப்ரிடி சென்னையில் துவக்க வீரராக களமிறங்கி அடித்த அடியை யாரும் மறக்க மாட்டார்கள். அதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. என்னை பொருத்தவரையில் எங்கள் நாட்டை சேர்ந்த சாகித் அப்ரிடி தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மரபுகளை உடைத்தவர் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.

Sehwag

அக்ரமின் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர். ஏனெனில் சேவாக் அதிகவேக இரட்டை சதம் மற்றும் முச்சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement