அந்த வெற்றிய மறக்கவே முடியாது, சச்சினை அவுட்டாக்கியும் பாராட்டுன சென்னை ரசிகர்களுக்கு நன்றி – வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானை பல வகைகளிலும் இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை என்றே கூறலாம். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடிக்கும் போது நிச்சயமாக பெரும்பாலான இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை வெளிப்படையாக வெறுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் மீது இருக்கும் நேசம் காரணமாக பெரும்பாலான ரசிகர்கள் அவ்வாறான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எந்த தவறுமில்லை. அந்த வகையில் கொல்கத்தா ரசிகர்கள் இந்திய அணிக்கு ஒன்று என்றால் போட்டியை புறக்கணித்து மைதானத்தை எரிப்பதற்கு கூட அஞ்ச மாட்டார்கள்.

இருப்பினும் விளையாட்டில் வெற்றி தோல்வியை சகஜம் என்பதையும் சிறப்பாக செயல்படுபவர்களே வெற்றியை பெற முடியும் என்பது நிதர்சனமாகும். அதற்கு முன்னுதாரணமாக வந்தாரை வாழவைக்கும் என்று பெயரெடுத்த தமிழக ரசிகர்கள் எதிரணியாக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் கைதட்டி பாராட்டுவார்கள். எடுத்துக்காட்டாக கடந்த 1999ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 271 ரன்களை சேசிங் செய்கையில் 82/5 என தடுமாறிய இந்தியாவுக்கு நயன் மோங்கியாவுடன் இணைந்த சச்சின் டெண்டுல்கர் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

வாசிம் அக்ரம் நன்றி:
அதனால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு வெறும் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது 136 ரன்கள் விளாசி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த சச்சின் டெண்டுல்கர் சக்லைன் முஷ்டக் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இறுதியில் அதை பயன்படுத்திய பாகிஸ்தான் இந்தியாவை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சிறப்பான வெற்றி பெற்றது. ஆனால் அப்போது இந்தியா தோற்றாலும் கடைசி நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட பாகிஸ்தானின் செயல்பாடுகளை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.

இன்றளவும் வரலாற்றில் மறக்க முடியாத அந்த நிகழ்வை அரங்கேற்றிய சென்னை மற்றும் தமிழக ரசிகர்களை சிறந்த கிரிக்கெட் அறிவு பெற்றவர்கள் என்று இப்போதும் உலகில் உள்ள அனைத்து வல்லுனர்களும் பாராட்டுவார்கள். இந்நிலையில் பொதுவாக சச்சினை அவுட் செய்தால் தங்களை வில்லனாக பார்க்கும் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் தங்களது செயல்பாடுகளை மதித்து பாராட்டிய சென்னை ரசிகர்களுக்கு அப்போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை டெஸ்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. வெப்பமான அன்றைய நாளில் பிட்ச் மிகவும் வெறுமையாக இருந்தது எங்களுடைய ரிவர்ஸ் ஸ்விங் பவுலிங்க்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த சமயத்தில் சக்லைன் முஸ்டக் எனும் சிறந்த ஸ்பின்னர் எங்களிடம் இருந்தார். குறிப்பாக அந்த சமயத்தில் அவர் கண்டுபிடித்திருந்த தூஸ்ரா பந்தை எந்த பேட்ஸ்மேன்களாலும் அடிக்க முடியவில்லை. ஆனால் அப்போட்டில் முதல் இன்னிங்ஸ்க்கு பின் சச்சின் அவரை கீப்பருக்கு பின் திசையில் லேப் ஷாட் அடித்து அற்புதமாக எதிர்கொண்டார். அதனால் தான் சச்சின் டெண்டுல்கர் வரலாற்றின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்”

“அதனால் மிகவும் நெருக்கமாக மாறிய அந்த போட்டியில் இந்தியாவுக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது மகத்தான சச்சின் 136 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அனைத்து பீல்டர்களும் பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் ஆஃப் ஸ்டம்ப்க்கு மேலே காற்றில் இருக்குமாறு பந்தை வீசினால் சச்சின் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பார் என்று சக்லைன் முஷ்டாக்கிடம் நான் சொன்னேன். அவரும் அவ்வாறு வீசியதால் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயற்சித்த சச்சின் டாப் எட்ஜ் கொடுத்தார். அந்த பந்தை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் நான் கச்சிதமாக கேட்ச் பிடித்தேன்”

இதையும் படிங்க:வீடியோ : சோம்பேறித்தனமாக செயல்பட்டதால் நூலிழையில் பரிதாபமாக ரன் அவுட்டான நியூஸிலாந்து வீரர்

“அதற்கு முன்பாக 40000 ரசிகர்கள் இந்தியாவுக்காக ஆதரவு கூச்சலிட்டார்கள். இந்தியாவில் ஒரு வெற்றி பெறுவது மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் அந்த வெற்றியை விட இறுதியில் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு எழுந்து நின்று கைதட்டியது இன்னும் மனதில் இருக்கிறது. எனவே அந்த டெஸ்ட் போட்டி கடைசி நேர பரபரப்பு மற்றும் சென்னை ரசிகர்களின் கரகோசத்தால் எனது வாழ்வில் நான் விளையாடிய மறக்க முடியாத போட்டிகளில் சிறந்த போட்டியாக அமைந்தது. எனவே சென்னை மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.

Advertisement