
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி, ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆகிய அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல தொடர்நாயகன் விருது வென்ற ஜஸ்ப்ரித் பும்ரா வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று மீண்டும் பாகிஸ்தான் ஜாம்பவான் வாஷிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருப்பதாக ஏற்கனவே அவர் பாராட்டியிருந்தார். அதே போல 80களில் மிரட்டிய ரிச்சர்ட்ஸ் தமக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன்கள் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பிடித்த பேட்ஸ்மேன், பவுலர்:
ஆனால் தற்சமயத்தில் விராட் கோலி தமக்கு மிகவும் பிடித்த உலகின் தரமான பேட்ஸ்மேன் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இப்படி சொல்வது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடிக்காது என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஒரு தரமான பவுலரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அது எங்கள் நாட்டவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இருப்பினும் எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் மகத்தான ஜஸ்ப்ரித் பும்ரா”
“ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக உள்ள அவர் என்னை இம்ப்ரஸ் செய்துள்ளார். ஏனெனில் அவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல பவுலர். 90களில் நான் அனைத்து மகத்தான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விளையாடினேன். இந்தியாவின் சுனில் கவாஸ்கர், நியூசிலாந்தின் மார்டின் க்ரோ, ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் ஆகியோர் மிகவும் பெரிய பெயர்கள். ஆனால் அவர்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸின் சர் விவ் ரிச்சர்ட்ஸ் பெயர் மேலே வரும்”
“என்னைப் பொறுத்த வரை அவர் இந்த அழகான கிரிக்கெட்டை அலங்கரித்த சிறந்த பேட்ஸ்மேன் என்று நினைக்கிறேன். அதே சமயம் 90களில் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸின் நம்ப முடியாத பிரைன் லாரா மற்றும் ஆஸ்திரேலியாவின் வாக் சகோதரர்களுக்கு எதிராக விளையாடினேன். இருப்பினும் எனக்கு பிடித்த ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன் சர் விவ் ரிச்சர்ட்ஸ்”
இதையும் படிங்க: 139க்கு ஆல் அவுட்.. இப்போவே கண்ணை கட்டுதே.. இலங்கை அணியை தெறிக்க விட்ட அண்டர்-25 இங்கிலாந்து அணி
“ஆனால் தற்போதுள்ள வீரர்களில் ஒருவரை நான் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் மீண்டும் அது இந்தியராக இருப்பார். களத்திலும் களத்திற்கு வெளியேயும் ஃபிட்னஸ், மனநிலை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றால் நான் அவரை ரசிக்கிறேன். அவர் தான் விராட் கோலி. அது உலக கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய பெயர்” என்று கூறினார்.