139க்கு ஆல் அவுட்.. இப்போவே கண்ணை கட்டுதே.. இலங்கை அணியை தெறிக்க விட்ட அண்டர்-25 இங்கிலாந்து அணி

ENG vs SL Lions
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து இலங்கை வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்த தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் அத்தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இலங்கை அணி பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. 4 நாட்கள் கொண்ட அந்தப் போட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி வோர்செஸ்டர் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 25 வயதிற்கு உட்பட்ட இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடினர்.

- Advertisement -

கண்ணை கட்டுதே:
அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு கருணரத்னேவை 26 ரன்களில் காலி செய்த ஜமான் அக்தர் மறுபுறம் தடுமாறிய மதுசங்காவை 11 ரன்னில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்ததாக வந்த குஷால் மெண்டிஸை 12 ரன்களில் அவுட்டாக்கினார்.

அதனால் 55/3 என தடுமாறிய இலங்கைக்கு நங்கூரத்தை போட முயற்சித்த ஏஞ்சலோ மேத்யூஸ் 11, தினேஷ் சாண்டிமல் 12, கேப்டன் டீ சில்வா 12 ரன்களில் ஜோஸ் ஹால் வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் சமரவிக்ரமா 8, பிரபத் ஜெயசூர்யா 20, ரத்னநாயகே 17 ரன்கள் எடுத்தும் இலங்கையை வெறும் 139 ரன்களுக்கு இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆல் அவுட்டாக்கி தெறிக்க விட்டது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜமான் அக்தர் 5, ஜோஸ் ஹால் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு துவக் வீரர்கள் ராபர்ட் யேட்ஸ் 25, பென் மெக்கின்னி 46 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஓலிவர் பிரைஸ் 22, ஜேம்ஸ் ரேவ் 22, பரான் அகமத் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் ஹம்சா சாய்க் நங்கூரமாக விளையாடி 91 ரன்களும் காசே அல்ட்ரிஜ் 78 ரன்களும் குவித்தனர்.

இதையும் படிங்க: போறபோக்க பாத்தா சூரியகுமார் யாதவுக்காக கம்பீர் அந்த முடிவை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கு இல்ல – விவரம் இதோ

ஆனால் 2வது நாள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து லயன்ஸ் 324 ரன்கள் எடுத்தது. இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் எடுத்தார். தற்போதைய நிலைமையில் 185 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் இப்போட்டியில் வெற்றி பெற பிரகாச வாய்ப்புள்ளது. மறுபுறம் உண்மையான தொடர் துவங்குவதற்கு முன்பாகவே “இப்பவே கண்ணை கட்டுதே” என்ற வகையில் இளம் இங்கிலாந்து வீரர்களிடம் இலங்கை தடுமாறி வருகிறது.

Advertisement