உலகின் சிறந்த பவுலிங் அட்டாக் இருப்பதால் அவங்க தான் இந்தியாவில் நடக்கும் 2023 உ.கோ ஜெயிக்க போறாங்க – வாசிம் அக்ரம் உறுதி

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலககோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. என்னை தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் இந்த தொடர் வரலாற்றில் 13வது முறையாக நடைபெறுகிறது. இதற்கு முன் 1987, 1996, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற இதர ஆசிய நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்த வருடம் தான் தன்னிச்சையாக முழுமையாக நடத்துகிறது.

worldcup

- Advertisement -

நிலையில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா இம்முறை 2011க்குப்பின் எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்லாமல் தவிக்கும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. இருப்பினும் அதற்கு போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அடித்து நொறுக்கும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி நடப்புச் சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்தும் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிம் அக்ரம் நம்பிக்கை:
அது போக மற்ற அணிகளிடம் தோற்றாலும் ஐசிசி உலகக் கோப்பை என்று வந்து விட்டால் காலம் காலமாக தோல்விகளை பரிசளித்து வரும் நியூசிலாந்தும் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் அணியாகவே இருக்கிறது. கூடவே தென்னாபிரிக்கா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய கிரிக்கெட் அணிகளையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற நிலைமையில் பரம எதிரியான பாகிஸ்தான் தங்களை பல வகைகளிலும் புறக்கணிக்கும் இந்தியாவை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

Pakistan

குறிப்பாக ஆசிய கோப்பை விவகாரத்தில் ஆரம்பத்தில் வரமாட்டோம் என்று தெரிவித்த பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் தற்போது இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடித்து உலகக் கோப்பையை வெல்வது தங்களது லட்சியங்களில் ஒன்று என சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உலகிலேயே மிகவும் தரமான பவுலிங் கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பேட்டிங்க்கு சாதகமான பிட்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்டு 2023 பிஎஸ்எல் கோப்பையை வென்ற ஷாஹீன் அப்ரிடி உச்சகட்ட ஃபார்மில் இருப்பது போல் கேப்டன் பாபர் அசாமும் மேலும் சில இளம் வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் தங்களது அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா – பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுமே சிறப்பாக இருக்கின்றன. எங்களது அணியின் கேப்டன் மிகச்சிறந்த வீரர். மேலும் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணி எங்களிடம் இருக்கிறது. குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்”

wasimakram

“அவர் தன்னுடைய பிஎஸ்எல் அணிக்கு தொடர்ந்து 2வது முறையாக கேப்டனாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அவர் தற்போது நல்ல ஆல் ரவுண்டராகவும் முன்னேறி வருகிறார். அவருடன் ஹரீஸ் ரவூப் – நாசீம் ஷா ஆகிய அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அத்துடன் முகமது ஹஸ்னைன், இசனுல்லா போன்ற தரமான இளம் வேகப்பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தான் அணியில் இருக்கிறார்கள். எனவே இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும் காரணத்தால் வலுவான பந்து வீச்சு கூட்டணியை கொண்ட அணி தான் வெல்லும் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அங்குள்ள பிட்ச்சுகள் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : நாங்க எங்களோட பெஸ்ட்ட காமிக்கவே இல்ல – தொடரின் வெற்றிக்கு பிறகு ஸ்மித் பேசியது என்ன?

அதாவது பேட்டிங்க்கு சாதகமான மைதானங்களில் எதிரணி பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தும் அளவுக்கு தரமான வேகப்பந்துவீச்சு கூட்டணி இருக்கும் காரணத்தால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வாசிம் அக்ரம் உறுதிபட தெரிவித்துள்ளார். அதற்கேற்றார் போல் கடந்த 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுடன் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் குறைந்தபட்சம் ஃபைனல் வரை சென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement