IND vs AUS : நாங்க எங்களோட பெஸ்ட்ட காமிக்கவே இல்ல – தொடரின் வெற்றிக்கு பிறகு ஸ்மித் பேசியது என்ன?

Steve-Smith
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தவறவிட்டது. அதற்கு பழிதீர்க்கும் விதமாக நேற்றுடன் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்கு எதிராக சாதனை படைத்தது.

IND-vs-AUS-1

- Advertisement -

அதன்படி ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் நேற்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது 49 ஓவர்களில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது.

IND-vs-AUS

இதன் காரணமாக 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த தொடரின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் :

- Advertisement -

இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு சுற்றுப்பயணமாக அமைந்தது. இந்த தொடரில் நாங்கள் எங்களுடைய பெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனாலும் இந்த தொடரை வெற்றி பெறும் அளவிற்கு எங்களிடம் இருந்து போதுமான செயல்பாடு வெளிப்பட்டுள்ளது. இந்த சென்னை மைதானம் முற்றிலுமே மாறுபட்ட ஒரு மைதானம். இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சற்று தவறுகளை செய்து விட்டோம்.

இதையும் படிங்க : IND vs AUS : நாங்க செய்த அந்த தவறு தான் எங்க தோல்விக்கு காரணம். தொடரை இழந்த பின்னர் – ரோஹித் வருத்தம்

ஆனாலும் இறுதி நேரத்தில் பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியின் எண்ணிக்கையை 269 ரன்கள் வரை கொண்டு சென்றது எங்களது அணிக்கு சாதகமாக அமைந்தது. இந்த போட்டியில் எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவர்கள் தான் இந்த போட்டியில் எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார்கள் என ஸ்டீவ் ஸ்மித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement