IND vs AUS : நாங்க செய்த அந்த தவறு தான் எங்க தோல்விக்கு காரணம். தொடரை இழந்த பின்னர் – ரோஹித் வருத்தம்

Rohit-Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக ஹார்டிக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

IND-vs-AUS

- Advertisement -

பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த இலக்கு எட்ட முடியாத இலக்கு அல்ல. நாங்கள் இந்த போட்டியில் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை.

Starc

சரியான நேரத்தில் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அதை இறுதிவரை கொண்டு செல்ல தவறி விட்டோம். பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாமல் போனதே இந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுபோன்ற மைதானங்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடுவது மிகவும் அவசியம். சிறப்பான துவக்கம் கிடைக்கும் நம்மால் எல்லைக்கோட்டை தாண்ட முடியவில்லை.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அது இந்த போட்டியில் முடியாமல் போனது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நடைபெற்றுள்ள ஒன்பது போட்டிகளில் நாங்கள் நிறைய பாடங்களையும், பாசிட்டிவ்வான விஷயங்களையும் கற்றுள்ளோம்.

இதையும் படிங்க : IND vs AUS : போட்டியின் ஆரம்பத்திலே அம்பயரின் முடிவால் பின்னடைவை சந்தித்த இந்தியா – விவரம் இதோ

இதனை அப்படியே வைத்துக்கொண்டு இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் முன்னேற்றத்தை காண முயற்சிப்போம். இந்த தொடரில் இருந்து எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement