IND vs AUS : போட்டியின் ஆரம்பத்திலே அம்பயரின் முடிவால் பின்னடைவை சந்தித்த இந்தியா – விவரம் இதோ

Siraj
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி பழி தீர்த்துள்ளது.

ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்த வேளையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49 ஓவர்களில் 269 ரன்களை குவித்தது. பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்து போட்டியின் போது இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அம்பயர் எடுத்த ஒரு தவறான முடிவும் காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த போட்டியின் நான்காவது ஓவரை வீசிய முகமது சிராஜ் மிட்சல் மார்ஷ்க்கு எதிராக lbw அப்பீல் செய்தார்.

- Advertisement -

ஆனால் அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை. அம்பயர் அவுட் தரவில்லை என்பதால் ரோகித் சர்மாவும் டிஆர்எஸ் கேட்கவில்லை. ஆனால் டீ.வி ரீப்ளேவில் பார்த்தபோது பந்து ஸ்டம்பில் பட்டதும் அம்பயர் முடிவே இறுதி என வந்தது. ஒருவேளை அம்பயர் அதற்கு அவுட் என்று அறிவித்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான மார்ஷ் 19 ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறியிருப்பார்.

இதையும் படிங்க : IND vs AUS : என்ன ஆனது கே.எல் ராகுலுக்கு? 16 ஆவது ஓவருக்கு பின்னர் கீப்பிங் செய்த இஷான் கிஷன் – விவரம் இதோ

அவர் அவுட் என்று அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆஸ்திரேலியா இவ்வளவு பெரிய ரன் குவிப்புக்கும் சென்றிருக்காது என்றும் இந்திய அணி வெற்றி பெறவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement