IND vs AUS : என்ன ஆனது கே.எல் ராகுலுக்கு? 16 ஆவது ஓவருக்கு பின்னர் கீப்பிங் செய்த இஷான் கிஷன் – விவரம் இதோ

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணத்தில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

IND-vs-AUS-1

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களை குவித்தது. பின்னர் 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த போட்டிகள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 61 ரன்களுக்கு குவித்தது.

Kuldeep-Yadav

பின்னர் 11-வது ஓவரை வீச வந்த ஹார்டிக் பாண்டியா அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்க வைத்தார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க வைத்த அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த நேரத்தில் 16-வது ஓவர் வரை விக்கெட் கீப்பிங் செய்த கே.எல் ராகுல் அதன் பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கே.எல். ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.

இந்நிலையில் இப்படி கே.எல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் செய்ய என்ன காரணம் என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியில் எழுந்த வேளையில் தற்போது அதற்கான விளக்கம் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : சென்னை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட முறைகேடு. 12 பேர் கைது – வெளியான தகவல்

அதன்படி சென்னையில் இன்று அளவுக்கு அதிகமாக இருந்த வெயில் இருந்ததன் காரணமாக ஒரு கட்டத்தில் வெப்பத்தை சுதாரிக்க முடியாமலே கே.எல் ராகுல் களத்தில் இருந்து வெளியேறினார் என்றும் அதன் காரணமாகவே இசான் கிஷன் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement