தெரிஞ்சே ரோஹித்துக்கு அப்டி போட்டா நொறுக்காம என்ன பண்ணுவாரு.. பும்ராவ பாருங்க.. ஃரவூபை விளாசிய அக்ரம்

Wasim Akram 6
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை சொந்த மண்ணில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 154/2 என்ற வலுவான நிலையிலிருந்தும் அதன் பின் சீட்டுக்கட்டு போல சரிந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 6 பவுண்டரி 6 சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து எளிதான வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களுடைய சரித்திரத்தை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

தெரிஞ்சே போட்டா எப்படி:
மறுபுறம் வரலாற்றை மாற்றுவோம் என்று சொல்லிவிட்டு கொஞ்சமும் போராட்டாமல் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியினர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஃபுல் ஷாட்டை ரோகித் சர்மா அடிப்பார் என்று தெரிந்து அவருக்கு எதிராக ஓரு தரமான பவுன்சர் பந்துகளை ஹரிஷ் ரவூப் வீசவில்லை என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் வீசி விட்டால் மட்டும் போதாது என்று விமர்சிக்கும் அவர் நல்ல லைன், லென்த் ஆகியற்றை இந்தியாவின் பும்ராவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் என ஹரிஷ் ரவூப்க்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹரிஷ் ரவூப்க்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஏனெனில் அவர் பாகிஸ்தானின் முதன்மை பவுலர். ஆனால் அவர் தான் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும்”

- Advertisement -

“இருப்பினும் அவர் எப்போதுமே பும்ரா போல பந்தை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்து நான் பார்த்ததில்லை. அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு நீங்கள் உங்களுடைய லென்த்தில் முன்னேற்றம் காண வேண்டும். மேலும் ரோகித் சர்மாவுக்கு எதிராக அவர் பவுன்சர் பந்துகளை வீசவே இல்லை. பொதுவாக நீங்கள் ரோகித்துக்கு எதிராக நல்ல பவுன்சர் பந்துகளை வீச வேண்டும்”

இதையும் படிங்க: 2020இல் டெலிவரி ஃபாயாக கண்ணீர்.. 2023இல் நாட்டுக்காக சரித்திர வெற்றியை டெலிவரி செய்த நெதர்லாந்து வீரர்

“அப்போது தான் அவர் ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்து எட்ஜ் கொடுத்து கேட்ச் வழங்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் ரோஹித்துக்கு எதிராக அதை செய்யாத செய்யாத ரவூப் இடுப்புக்கு மேலே கச்சிதமான பந்துகளை போட்டுக் கொடுத்தார். அதை எங்கே அனுப்ப வேண்டும் என்பது ரோஹித் சர்மாவுக்கு நன்றாக தெரியும். மறுபுறம் பும்ரா மிகவும் அறிவுப்பூர்வமான உலகின் சிறந்த பவுலர். குறிப்பாக ஸ்விங் கிடைக்காத போது ஸ்டம்ப் லைனை ஃபினிசிங் செய்து வீசிய அவர் முகமது ரிஸ்வானை கிளீன் போல்டாக்கினார்” என்று கூறினார்.

Advertisement