இவர் இவ்ளோ சூப்பரா ஆடுறாரு. பேசாம டாப் ஆர்டர்லயே விளையாடலாம் போலயே – வியக்க வைத்த இளம்வீரர்

Sundar-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளாக தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி 49 ரன்கள் குவித்தார்.

sundar 1

- Advertisement -

அவரைத்தவிர ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வாஷிங்டன் சுந்தர் 60 ரன்களிலும், அக்சர் படேல் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் வெற்றிக்கான வாய்ப்பு சற்று அதிகமாக காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்தாலும் அவருக்கு துணையாக நின்ற தமிழக இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் தனது அபாரமான நேர்த்தியான ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஆஸ்திரேலிய தொடரின் போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக அணியில் இடம் பிடித்த சுந்தர் அந்த தொடரில் தனது பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார்.

sundar3

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் அவர் சென்னையில் நடைபெற்ற போட்டியில் 85 ரன்கள் குவித்து இருந்தார். அறிமுகமாகி சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவர் தனது 3-வது அரைசதத்தை இன்று அடித்து அசத்தினார். பின்வரிசையில் களமிறங்கி இந்திய அணியின் பாதிப்பை நீக்கும் அளவிற்கு அவரால் சிறப்பாக
விளையாட முடிகிறது.

sundar 2

மேலும் அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் திறனை போல் சரியாக ஷாட்களை செலக்ட் செய்து விளையாடுகிறார். எனவே அவர் டாப் ஆர்டரில் இறங்கினாலும் அவரால் நிச்சயம் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நாம் நம்பலாம். மேலும் ஏற்கனவே அவர் ஆஸ்திரேலிய தொடர் முடிந்து நாடு திரும்பிய போது கூட இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக எனக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement