பவர்பிளேயில் பந்துவீச விரும்பும் இளம் கிரிக்கெட் வீரர்…யார் தெரியுமா

sundar1
- Advertisement -

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் அசத்திவருகின்றார்.

sundar

- Advertisement -

18வயதேயான இளம்வீரரான இவர் இந்த தொடரில் இதுவரையில் பந்துவீசிய நான்கு போட்டிகளில் 7விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு பெரிதும் உதவியுள்ளார்.

தான் பந்துவீசிய நான்கு ஆட்டங்களிலும் 2/28, 0/23, 2/21, 3/22 என்று ரன்களை மட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.வங்கதேச அணியை வென்றபின் மீடியாவை சந்தித்த அவர் “பவர் பிளேயில் பந்துவீசுவதை விரும்புகின்றேன் நான், மேலும் பவர்பிளேயின் போது பேட்ஸ்மேன்கள் என்ன நினைக்கின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடிகின்றது.

sunder

ஒவ்வொரு ஓவரிலும் எதிரே நிற்கும் ஆட்டக்காரர்கள் பவுண்ட்ரிகளையும் சிக்ஸர்களையும் விளாசவே விரும்புவர். அந்தநேரத்தில் எதிரணியினரின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை நாம் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பந்துவீச வேண்டும் என்றார்.

Advertisement