IND vs NZ : என்னோட விக்கெட்டை நான் தியாகம் செய்ய காரணமே இதுதான் – வாஷிங்டன் சுந்தர் வெளிப்படை

Washington-Sundar
- Advertisement -

லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் வெற்றி இலக்கினை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்தில் இருந்தே மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் மிகவும் பொறுமையாக விளையாடி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவை என்ற போதும் போட்டி பரபரப்பாக சென்றது. இறுதியில் சுதாரித்த சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பேட்டிங் செய்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடி வந்த வேளையில் தேவையில்லாமல் சூரியகுமார் யாதவ் ஓடி வந்ததால் ரன் அவுட்டாகி ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் இப்படி ரன் அவுட் ஆனதும் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

SKY and Sundar

மேலும் போட்டி முடிந்து வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க நான்தான் காரணம் அந்த பந்தில் ரன் ஓடியிருக்கவே கூடாது. ஆனால் நான் பந்தை கவனிக்காமல் ஓடிவிட்டேன். முற்றிலும் வாஷிங்டன் சுந்தர் அவுட் ஆனதற்கு நான் தான் காரணம் என்று தனது தவறினை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போட்டி முடிந்து பேசிய வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : இந்த போட்டியை நேரில் பார்த்தவர்கள், தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவருமே கடைசிவரை படபடப்பாக இருந்திருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

- Advertisement -

ஏனெனில் நாங்களும் அவ்வாறுதான் போட்டியை இறுதிவரை மிகவும் படபடப்பாக பார்த்துக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அதே போன்று இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகம் இருந்ததால் தொடர்ச்சியாக சுழற்பந்து வீச்சாளர்களே பந்து வீசினர். இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. சூரியகுமார் யாதவ் மூலம் நான் ரன் அவுட் ஆனபோது சற்று கடினமாகத்தான் இருந்தது.

இதையும் படிங்க : IND vs NZ : சாத்தியமா நான் பண்ணது தப்புதான். அதை நானே ஒத்துக்குறேன் – ஆட்டநாயகன் சூரியகுமார் பேட்டி

இருந்தாலும் சூரியகுமார் யாதவ் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று. அதற்காகவே நான் என்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தேன். அதுமட்டுமின்றி இது போன்ற சில நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பது இயல்புதான். ஆனாலும் சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் இறுதிவரை களத்தில் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினாலே தாமாக முன்வந்து ரன் அவுட் ஆனதாக வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement