- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் மேட்ச்ல தோற்றதும் தென்னாப்பிரிக்க இன்பேர்மேஷன் கிடைச்சுடுச்சு.. ஜிம்பாப்வேவை வீழ்த்தியது பற்றி சுந்தர் பேட்டி

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வெறும் 116 ரன்களை அடிக்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்ததால் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்தனர். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு கூட ஜிம்பாப்வே தகுதி பெறவில்லை.

ஆனால் அந்த அணியிடம் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா சீனியர் வீரர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையில் தோல்வியை பெற்று அவமானத்தை சந்தித்தது. இருப்பினும் அங்கிருந்து சுதாரித்து விளையாடிய அதே இளம் வீரர்கள் அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு 4 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தனர். குறிப்பாக ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

தமிழக தொடர்நாயகன்:
ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 167/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58, சிவம் துபே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 168 ரன்களை துரத்திய ஜிம்பாப்வே மீண்டும் சுமாராக விளையாடி 18.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பராஸ் அக்ரம் 27, டியோன் மேயர்ஸ் 34 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 4, சிவம் துபே 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் முக்கிய வீரர்கள் இல்லாமலேயே தொடரை வென்ற இந்தியா தங்களை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. இந்த தொடர் முழுவதும் அசத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் முதல் போட்டியில் தோற்றதும் தென்னாப்பிரிக்காவை போன்ற சூழ்நிலை ஜிம்பாப்பேவில் இருக்கும் தகவல்களை தெரிந்து கொண்டதாக சுந்தர் கூறியுள்ளார். எனவே அதற்கு தகுந்தார் போல் விளையாடி தொடரை வென்றதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இத்தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது நல்லது”

இதையும் படிங்க: ஜிம்பாப்வேயில் ரெண்டையும் செஞ்சது ஸ்பெஷல்.. டி20 பேட்டிங்கில் கம்பேக் கொடுக்க இது போதும்.. துபே பேட்டி

“முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பின் தென் ஆப்பிரிக்காவை போலவே இங்கேயும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அந்த தகவலை தெரிந்துக் கொள்ள எங்களுக்கு போதுமான நேரம் இருந்தது. இந்த தொடரில் நான் நன்றாக பந்து வீசினேன். இத்தொடரில் எடுத்துச் செல்ல நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். ஒரு அணியாக நாங்கள் நிறைய வெற்றியை பெற்றோம்” என்று கூறினார்.

- Advertisement -