பவர்பிளே ஓவர்கள் கடினம் என்றாலும் இவருக்காகவே நான் தொடர்ந்து பந்துவீசுகிறேன் – மனம் திறந்த சுந்தர்

sundar
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போதைய இந்திய டி20 அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். மேலும் இந்திய அணியில் தற்போதைக்கு உள்ள பிங்கர் ஸ்பின்னர் என்றால் இவர் மட்டுமே டி20 போட்டியில் உள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட துவங்கிய சுந்தர் இதுவரை 15 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

sundar

- Advertisement -

மேலும் அவ்வாறு அவர் கலந்துகொண்ட போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அவருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடினமான வேலையை அவர் தொடர்ந்து சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இது குறித்து தற்போது சுந்தர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

பவர்பிளே ஓவர்களில் பந்து வீசுவது கடினமானது என்றாலும் அது எனக்கு உற்சாகத்தை தருகிறது ஏனெனில் சரியான லென்தில் பந்தை சரியாக பிட்ச் செய்ய வேண்டும் இல்லையெனில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கும்போது முடிவுகளும் மாறும் கடினமான வேலை என்றாலும் எனக்கு உற்சாகத்தை தருவதால் தொடர்ந்து பவர்பிளே ஓவர்களில் பந்துவீசி வருகிறேன். மேலும் ஒரே நேரத்தில் இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன் என இருவரும் மாற்றி மாற்றி வீசுவது எனக்கு பிடிக்கும்.

அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் கடந்த மூன்று வருடங்களாக இந்த வேலையை நான் செய்து வர காரணம் யாதெனில் கேப்டன் கோலி என்மீது நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். அதனை காப்பாற்றவே நான் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறேன். மேலும் எனக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு அளிக்கும் இந்திய கேப்டனுக்கு நன்றி என்றும் நான் கிரிக்கெட்டை அனுபவித்த மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன் என்றும் சுந்தர் கூறினார்.

Advertisement