- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் தொடர் மட்டுமின்றி டி20 தொடரில் இருந்தும் விலகிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் – என்ன காரணம்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

டி20 தொடரில் இருந்தும் விலகிய வாஷிங்டன் சுந்தர் :

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது வரும் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியின் போது இந்திய அணி சார்பாக விளையாடியிருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் விலா எலும்பு பகுதியில் காயமடைந்தார். அதன் காரணமாக எஞ்சியிருந்த 2 போட்டிகளில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் தற்போது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்தும் விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் முதல் ஒருநாள் போட்டி முடிந்து அவருக்கு ஏற்பட்ட காயம் குறித்த பரிசோதனையை மேற்கொண்ட போது விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளது கண்டறியப்பட்டது.

- Advertisement -

அதனால் அவரால் இந்த ஒருநாள் தொடர் மட்டுமின்றி டி20 தொடரிலும் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? என்பதும் சந்தேகமாகியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவின் வெற்றிக்கு 2 சொதப்பலால் வேட்டு வைத்த கிருஷ்ணா.. ஷமி, அர்ஷ்தீப் சேர்க்குமாறு ரசிகர்கள் விளாசல்

இவ்வேளையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு பதிலாக வேறு மாற்றுவீரரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

- Advertisement -