5 ஆண்டுகள் கழித்து கிடைத்த ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பு – வாஷிங்க்டன் சுந்தர் சாதித்தது என்ன?

Sundar-1
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 6 மதியம் 1.30 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் அகமதாபாத்தில் துவங்கியது.

Pollard

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பங்கேற்கும் 1000வது போட்டி இதுவாகும். இந்த சரித்திரம் நிறைந்த போட்டிக்கு கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மா இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இந்திய அணியில் ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா அறிமுகப் போட்டியில் களமிறங்கினார்.

இந்தியா மாஸ் பௌலிங்:
இதை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் வெறும் 8 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதை அடுத்து ஜோடி சேர்ந்த பிரண்டன் கிங் மற்றும் டேரன் ப்ராவோ ஆகியோரை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் செய்து போட்டியை ஆரம்பத்திலேயே இந்தியாவின் பக்கம் திருப்பினார்.

washington

இதனால் ஏற்பட்ட சரிவிலிருந்து அந்த அணியை மீட்க களமிறங்கிய ப்ரூக்ஸ் 12 ரன்களிலும் நிக்கோலஸ் பூரன் 18 ரன்களிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் கிரண் பொல்லார்ட் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்டானார். இதனால் 71/5 என சரிந்த வெஸ்ட் இண்டீஸ் அதில் இருந்து கடைசி வரை மீள முடியாமல் 43.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக யூஸ்வென்ற சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

5 வருடங்களுக்கு பின் சுந்தர்:
முன்னதாக இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு 5 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம் தற்போது 22 நிரம்பியுள்ள வாசிங்டன் சுந்தர் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிராக மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் தனது 17வது வயதில் இந்தியாவிற்காக அறிமுகமாக களமிறங்கினார்.

Washington

அந்த போட்டியில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து 208* ரன்களை விளாச இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அறிமுக போட்டியில் 10 ஓவர்கள் வீசிய வாசிங்டன் சுந்தர் 65 ரன்களை கொடுத்து 1 விக்கெட் எடுத்திருந்தார். இருப்பினும் அதன்பின் இந்திய ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவேயில்லை.

பொன்னான வாய்ப்பு:
அதன்பின் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து சில காலம் விலகியிருந்த அவர் அதிலிருந்து மீண்டு வந்து இந்தியாவுக்காக 30 டி20 போட்டிகளிலும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போதிலும் கூட ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்து வந்தது. அதற்குள் 5 வருடங்கள் உருண்டோடிய பின் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொன்னாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த பொன்னான வாய்ப்பை கனக்கச்சிதமாக பயன் படுத்திய அவர் இன்றைய முதல் ஒருநாள் போட்டியில் 9 ஓவர்களை வீசி 1 மெய்டன் ஓவர் உட்பட 30 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்து தனது தேர்வை நிரூபித்துள்ளார்.

washington

இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது வெறும் 22 மட்டுமே நிரம்பியுள்ள வாசிங்டன் சுந்தர் டி20 போட்டிகளில் கூட பவர்ப்ளே ஓவர்களில் தைரியமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பதில் வல்லவராக இருந்து வருகிறார். இன்றைய போட்டியிலும் அதை கச்சிதமாக செய்துள்ள வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்கும் பட்சத்தில் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட தகுதியானவராக மாறுவார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement