இதுக்கெல்லாம் காரணம் தோனி, கோலி தான்..! வாஷிங்டன் சுந்தர் நெகிழ்ச்சி..! – விவரம் உள்ளே

sundar
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியது தனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது என்றும், இந்த தொடரின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று பெங்களூரு அணியில் விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
sundar

நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் பல இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். அதில் டெல்லி அணியில் உள்ள ரிஷப் பண்ட், மும்பை அணியின் இஷாந்த் கிஷன் ஆகியோர் நல்ல அடையாளத்தை பெற்றனர். அதே போன்று பெங்களூரு அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு சிறந்த அடையாளம் கிடைத்ததடன் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி சமீபத்தில் பேசிய சுந்தர் “இந்த தொடரில் விளையாடியது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. அணைத்து போட்டிகளிலும் அணியில் இடம்பெறவேண்டும் என்பது முக்கியமில்லை. நான் இதிலிருந்த நிறைய விஷங்களை கற்றுக் கொண்டேன். சென்ற ஆண்டு புனே அணியில் தோனி தலைமையில் விளையாடினேன், இந்த ஆண்டு கோலி தலைமையில் விளையாடியுள்ளேன், மூத்த வீரர்களுடன் விளையாடுவது பல அனுபவங்களை தந்தது. தற்போது இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது, அந்த தொடரில் சிறப்பாக பந்துவீச வித்யாசமான முறைகளில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
bangalore

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் விளையாடி வரும் இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் புனே அணியில் விளையாடி வந்தார். இந்த ஆண்டு பெங்களூரு அணியில் ஆடிய இந்த 18 வயது இளம் வீரர் அந்த அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். வேக பந்து வீச்சாளரான இவர் இந்த ஆண்டு நடந்து வரும் ஐபில் போட்டிகளில் இவரது வேகம் குறைந்துவிட்டது. 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குறிப்பிடத்தக்கது.

Advertisement