கடைசி பந்தில் இதுதான் நடக்கும் என்று நினைத்தேன்…ஆனால் சிக்சர் அடிப்பார் என்று நினைக்கவில்லை !

sundar
- Advertisement -

நடந்து முடிந்த முத்தரப்பு நிடாஸ்கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.அறிமுகமான முதல் தொடரிலேயே தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

washington

- Advertisement -

தொடர்நாயகன் விருதுபெற்ற வாஷிங்டன் சுந்தர் சென்னை திரும்பியபின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் அவர்பேசியதாவது “முதல் தொடரிலேயே சிறப்பாக விளையாடி தொடர்நாயகன் விருதுபெற்றது மகிழ்ச்சியளிக்கின்றது. முத்தரப்பு தொடரில் இலங்கை வங்கதேச அணிகளுடன் விளையாடியது நல்ல அனுபவத்தை தந்தது.

கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிப்பார் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர் பந்தை அடித்ததும் அது போர் தான்,இன்னும் ஆட்டம் இருக்கின்றது,அடுத்தது சூப்பர்ஓவர் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அவர் அடித்தபந்து பவுண்டரி கோட்டை தாண்டி இரண்டு,மூன்று அடி உள்ளே சென்று விழுந்து சிக்ஸர் ஆனது என்றார்.

Dkarthik

மேலும் பேசிய அவர் தனது இந்த நிலைக்கு தனது தந்தை தான் முக்கிய காரணம் என்றும்,அவரது பெற்றோர்கள் சிறுவயது முதலே தன்னுடைய திறமையை கண்டுபிடித்து தனக்கு ஊக்கமளித்தனர் என்றார்.பின்னர் சென்னையில் இருந்துகொண்டே சென்னை அணிக்கு விளையாடமுடியாமல் போனது வருத்தம்தான் என்றுபேசிய அவர் ஐபிஎல்-இல் சிறந்த அணிஎன்றால் அது சென்னை அணிதான் என்றார்.

Advertisement