- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 விக்கெட்ஸ்.. லார்ட்ஸில் ஹர்பஜன், அஸ்வினால் முடியாததை செய்த வாஷிங்டன் சுந்தர்.. 2 அபார சாதனை

இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்தது விளையாடிய இந்தியாவும் சிறப்பாக பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்து ஸ்கோரை சமன் செய்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 100, ரிஷப் பண்ட் 74, ஜடேஜா 72 ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

லார்ட்ஸில் அசத்திய தமிழன்:

அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை மீண்டும் சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 192 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடும் இந்தியா 4வது நாள் முடிவில் 58/4 என தடுமாறி வருகிறது.

ஜெய்ஸ்வால் 0, கருண் நாயர் 14, கேப்டன் கில் 6 ரன்களில் அவுட்டான இந்திய அணிக்கு களத்தில் ராகுல் 33* ரன்களுடன் போராடி வருகிறார். முன்னதாக இந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான ஹாரி ப்ரூக், ஜோ ரூட் ஆகியோரை போல்டாக்கிய வாஷிங்டன் சுந்தர் கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் கிளீன் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

1974க்குப்பின் அபார சாதனை:

லார்ட்ஸ் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் ஆகியோர் கூட தங்களுடைய மொத்த கேரியரில் 2 விக்கெட்டுக்கு மேல் எடுத்ததில்லை. ஆனால் அங்கே சுந்தர் வெறும் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக லார்ட்ஸ் மைதானத்தில் 1974க்குப்பின் கடந்த 49 வருடங்களில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையை சுந்தர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: தற்போதைக்கு இதுதான் நிலைமை.. இந்தியா ஜெயிக்கணும்னா அந்த 2 பேரால் தான் முடியும் – அஷ்வின் கருத்து

அது போக சேனா நாடுகளில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 2வது குறைந்த ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற மணிந்தர் சிங் சாதனையையும் சுந்தர் உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஹர்பஜன் சிங்: 4/10, டர்பன்
2. வாஷிங்டன் சுந்தர்: 4/22, லார்ட்ஸ்
3. மணிந்தர் சிங்: 4/26, லீட்ஸ்
4. பிஎஸ் சந்திரசேகர்: 4/30, சிட்னி

- Advertisement -