இவர் பீல்டிங் செய்யும் திசையில் நான் பந்தை அடிக்கவே மாட்டேன். அவ்வளவு பயம் – வார்னர் ஓபன் டாக்

Warner
- Advertisement -

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் கிரிக்கெட் குறித்த பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Gambhir

- Advertisement -

அந்த வகையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அனுபவங்கள் மற்றும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் குறித்த கருத்துக்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இந்தியாவின் தலை சிறந்த பீல்டர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

என்னைப் பொறுத்தவரை தற்போது இந்திய அணியில் மட்டுமல்ல உலக அளவிலும் சிறந்த பீல்டர் என்றால் அது ஜடேஜா தான். ஸ்லீப் மற்றும் கல்லி பகுதியில் நிற்கவில்லை என்றாலும் கவர் திசைகளிலும், எல்லைக் கோட்டுப் பகுதி, மத்திய பகுதி அனைத்து திசைகளிலும் சிறப்பாக பீல்டிங் செய்துள்ளார்.

Jadeja-1

மேலும் துல்லியமான த்ரோ என்றால் அது ஜடேஜாவின் த்ரோ தான். அவரை தாண்டி பந்து எளிதில் செல்ல முடியாது. அவரிடம் பந்தை அடித்துவிட்டு ரன் ஓட ஆசைப்பட்ட பல பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனது அதிகம் என்று கூறியுள்ளார். தற்போது உலகின் மிகச்சிறந்த பீல்டர் என்பது மட்டுமின்றி பந்தை மிக துல்லியமாக த்ரோ செய்வதிலும் அவர் வல்லவர் என்று புகழாரம் சூட்டினார்.

- Advertisement -

இதுமட்டுமின்றி இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி துவக்கவீரரான வார்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்திய அணியில் ஜடேஜா மிகச்சிறந்த பீல்டர் அவர் நிற்கும் திசைகளில் பந்து சென்றால் ரன் நான் பயப்படுவேன். மேலும் அவர் இருக்கும் திசைகளில் நான் பேட்டிங் செய்யும்போது பந்தினை அடிக்க மாட்டேன் என்றும் வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Jadeja

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஸ்மித் ஜடேஜா தான் மிகச்சிறந்த பீல்டர் என்று பாராட்டியது மட்டுமின்றி உலகின் முன்னணி பீல்டிங் ஜாம்பவானான ஜான்டி ரோட்ஸ் தனது பார்வையில் ஜடேஜா சிறந்த கேட்சிகளை பிடித்துள்ளார் மேலும் எப்போது அவர் காலத்தில் இருந்தாலும் ஈடுபாட்டுடன் பந்தை கவனிப்பதில் உன்னிப்பாக இருக்கிறார் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement