David Warner : கடந்த ஒருவருடம் எனக்கு இந்த நிலைமை தான் இருந்தது . அதனால் தான் சிறப்பாக விளையாடினேன் – வார்னர் பேட்டி

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய

Warner
- Advertisement -

உலக கோப்பை தொடரின் நான்காவது போட்டி நேற்று கவுண்டி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் நயிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதின.

afh

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.2 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக நஜிபுல்லா 51 ரன்களை அடித்தார். ரஷீத் கான் அதிரடியாக ஆடி 3 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் குவித்தார்.

பிறகு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வார்னர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்தார். பின்ச் 66 ரன்களை குவித்தார். ஆட்டநாயகனாக வார்னர் தேர்வானார்.

Warner

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வார்னர் கூறியதாவது : இந்த வெற்றி சிறப்பான வெற்றியாகும். நான் ரன்களை சுழற்சியில் வைக்கவே நினைத்து விளையாடினேன். பயிற்சியின் போதும் இன்று விளையாட வரும் பொழுதும் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஏனெனில் கடந்த ஒரு வருடமாக நான் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தேன் அதனால் இந்த போட்டியில் சற்று பதட்டம் அடைந்தேன். ஆனால் பின்ச் எதிர் முனையில் இருக்கும் பொழுது எனக்கு நிம்மதியாக இருந்தது.

warner

அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நான் நிதானமாக விளையாடி பிறகு சிறப்பாக ஆடத்துவங்கினேன். பிறகு எனக்கு பேட்டிங் செய்வது எளிதானது. கடந்த ஒருவருடமாக கடினமான சூழ்நிலையில் இருந்த நான் சிறப்பான ஆட்டத்தின் மூலமே இயல்பான ஆட்டத்திற்கு மாறமுடியும் என்பதால் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினேன் என்று வார்னர் கூறினார்.

Advertisement