விராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் கேப்டனாக இருக்க இவரே சிறந்தவர் – வார்னர் கூறியது யாரை தெரியுமா ?

warner

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடருக்காக இரு அணியை சேர்ந்த வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் வீரர்களும் கூட தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் இந்த தொடர் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு சமீபத்தில் 34 வயது பிறந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் எனக்கு மீதமுள்ள நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் வாக்குவாதத்தின் மூலம் என்னை வம்புக்கு இழுத்தால் அதிலிருந்து நான் விலகிச் செல்லவே விரும்புவேன். இந்த தொடரில் நான் எப்போதும் ஸ்லெட்ஜிங் செய்யவே மாட்டேன்.

Warner-1

காலப்போக்கில் நான் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். என்னை சீண்டுபவர்களை எதிர்த்து நான் மீண்டும் வாக்குவாதம் செய்யாமல் எனது பதிலை பேட் மூலம் கொடுக்க முயற்சிப்பேன். ஏனெனில் போட்டியின் இடையே ஸ்லெட்ஜிங் செய்யும் பொழுது போட்டியில் கவனச் சிதைவு ஏற்படுகிறது. இதனால் இந்த தொடரில் இந்த தவறை மட்டும் நான் செய்யவே மாட்டேன்.

- Advertisement -

விராட்கோலி இல்லாத சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை வகிக்க இருக்கும் ரஹானே மிகவும் அமைதியானவர். அவரது ஆட்ட அணுகுமுறை நன்றாக இருக்கும். அவர் கிரிக்கெட் அறிவு படைத்தவர். அவரை சீண்டுவதற்கு முன்பு நிறைய விஷயங்களை யோசிக்க வேண்டும். இந்திய அணியை பொறுத்த மட்டில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் தன்மை கொண்ட மூன்று, நான்கு சிறந்த வீரர்கள் உள்ளது அவர்களுக்கு அனுகூலமாகும்.

Rahul

ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில் நல்ல துவக்கம் கொடுப்பதுடன் மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை மெயின்டெயின் செய்து விளையாட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் எனது வழக்கமான ஆக்ரோஷத்தை குறைத்து சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று வார்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.