இப்படி ஒரு மட்டமான பாலை பாத்திருக்க முடியாது. அதிலும் சிக்ஸ் அடித்த வார்னர் – என்னங்க இது

Warner
- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய வேளையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் முக்கியமான 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்லது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இரண்டாவதாக சேசிங் செய்த போது ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான வார்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 49 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் டேவிட் வார்னர் பேட்டிங் செய்தபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. அதன்படி பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஹபீஸ் ஓவரில் வார்னர் அடித்த சிக்ஸர் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முஹமது ஹபீஸ் குறிப்பிட்ட அந்த பந்தினை வீசும்போது அவரது கன்ட்ரோல் இன்றி கையிலிருந்து பந்து நழுவி இரண்டு பிட்சாகி வார்னரிடம் சென்றது. என்னதான் பந்து 2 பிட்ச் ஆகி அவரிடம் சென்றாலும் அதை சரியாக கணித்து வார்னர் சிக்சர் அடித்தார். அந்தப் பந்து நோபால் என்றும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியின் வீக்கான வீரர் இவர்தான். அரையிறுதி தோல்விக்கு பிறகு – சுனில் கவாஸ்கர் கருத்து

இப்படி வார்னர் சிறப்பான சிக்ஸர் ஒன்றினை அடித்தாலும் கிரிக்கெட்டில் இதுபோன்ற பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் விட்டு விடுவார்கள். அந்த பந்து டெட் பால் என்று அறிவிக்கப்படும். ஆனால் அதனை வார்னர் சிக்ஸர் அடித்தது தற்போது பெரும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கம்பீர் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் வார்னர் அடித்த இந்த ஷாட் தவறான ஒன்று என்று விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement