கொரோனா வைரஸால் மறந்து போன வார்னர். ஒருநாள் போட்டியில் வார்னர் செய்ததை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

- Advertisement -

கரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தின் காரணமாக சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி ரசிகர்கள் எல்லாம் இல்லாமல் மூடிய மைதானத்தில் நடைபெற்றது. ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இது அமைந்தது.

AusvsNZ

- Advertisement -

ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றதால் இரு அணி வீரர்களுக்கும் தொலைக்காட்சியில் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் புதுவித அனுபவமாக அமைந்தது. மைதானத்தில் எங்கு சென்றாலும் ரசிகர்களின் ஆரவாரத்துடனும் ஆட்டோகிராப், உரையாடல் என்று நவீன வீரர்கள் மகிழ்ச்சியுடன் மைதானத்தை சுற்றி வந்தனர்.

ஆனால் ஆஸி-நியூஸி ஒருநாள் போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. அதிரடியாக ஆடிய வார்னர் அரைசதம் அடித்தார். ஆனால் நான் அரை சதம் எடுத்து விட்டது அவருக்கு தெரியவில்லை, மட்டையும் உயர்த்தவில்லை.

warner

ஏனெனில் ரசிகர்கள் மூலமாக அதை இத்தனை நாட்களாக அறிந்து வந்த வார்னர். ரசிகர்கள் இல்லாததால் யாருக்காக மட்டையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதுபோல் நினைத்துவிட்டார்.
சிக்ஸர்களாக அடிக்கப்பட்ட பந்துகளை எடுத்துச் ரசிகர்கள் இல்லை இத்தனை ஆண்டு காலம் இல்லாத புதிய அனுபவம் இந்த 22 வீரர்களுக்கும் கிடைத்தது.

- Advertisement -

பந்து கிட்டத்தட்ட தொலைந்துவிட்டது என்றே கூறும் அளவிற்கு வீரர்களே ஓடிச்சென்று 5, 6 வீரர்கள் சேர்ந்து பந்தினை தேடி எடுத்து வந்தனர். இதனால் 10 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
நியூசிலாந்து வீரர் பெர்குசன் ஒருமுறை நாற்காலி களுக்கு அடியில் சென்று தவழ்ந்து கொண்டே சென்று பந்தை எடுத்து வந்தார்.

Ferguson

இப்படி ரசிகர்கள் இல்லாத கிரிக்கெட் ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மீதி போட்டிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement