16 வயதில் நான் பார்க்கும்போது சச்சின் அவ்ளோ வொர்த் இல்லன்னு நெனச்சேன் – பாக் வீரர் பேட்டி

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக சுமார் 24 ஆண்டுகள் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் டெண்டுல்கர் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம், அதிக போட்டியில் விளையாடிய வீரர் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கிரிக்கெட்டில் இவர் படைக்காத சாதனைகள் ஏதும் இல்லை என்று கூறும் அளவிற்கு எண்ணற்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

சச்சின் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 16 வயதில் அறிமுகமானார். தான் விளையாடிய முதல் இன்னிங்சில் 15 ரன்கள் எடுத்த நிலையில் சச்சின் ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமாகி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரை அறிமுகப் போட்டியில் இரண்டாவது பந்திலேயே டக் அவுட் ஆக்கிய சம்பவம் குறித்து தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வக்கார் யூனிஸ் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : சச்சின் டெண்டுல்கர் 19 வயதுக்கு உட்பட்டவர் அணியில் இருந்து வந்ததால் ஒட்டுமொத்த அணியும் ஆர்வமாக இருந்தது. முச்சதம் அடித்த ஒரு மாணவன் பள்ளிக்கூட அளவில் சதம் அடித்தாலே பெரிய விஷயம். ஆனால் முச்சதம் அடித்த அந்த வீரரை பார்க்க ஆவலாக இருந்தோம். அவ்வாறு நான் சச்சினை முதல் முறை பார்க்கும்போது அவர் என்னை ஈர்க்கும் அளவிற்கு இல்லை.

விளையாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வருடங்களாக அவர் செய்தவை அற்புதமானது. கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய பெயரை பதிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. அந்த சிறுவன் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறான் என்று என்பதை காணும்போது எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இருப்பினும் அவரது கடின உழைப்பு அவருக்கு இந்த பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது.

- Advertisement -

கராச்சியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவரை நான் விரைவாக வீழ்த்தினேன். 15 ரன்கள் எடுத்த போது அவரை அவுட்டாக்கினேன் அதே போன்று ஒரு நாள் போட்டிகளிலும் அவரை இரண்டாவது பந்திலேயே அவுட்டாக்கினேன். நான் ஆரம்பத்தில் அவரை விரைவாக வீழ்த்தினாலும் அதே 16 வயதில் அவர் கலந்து கொண்ட ஒரு டெஸ்ட் போட்டி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அந்த மைதானம் முழுவதும் பந்துவீச்சுக்கு தயார் செய்து வைக்கப்பட்ட நிலையில் அவர் அரைசதம் அடித்தார்.

Sachin 1

மேலும் களமிறங்கிய போது அவருக்கு ஒரு பந்து மூக்கில் தாக்கியது. அப்போது அவருக்கு 16 வயது தான் இருப்பினும் தைரியமாக களத்தில் நின்று உறுதியாக பேட்டிங் செய்தார். அதன் பின்னர் அவருடைய சிறப்பான ஆட்டம் மூலம் அரைசதம் அடித்தார். அதன் பின்னர் இவர் எங்கேயோ செல்வார் என்று நினைத்தேன். இப்போது கிரிக்கெட் வரலாற்றையே புரட்டிப் போட்டு இருக்கிறார் என்று வக்கார் யூனிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement