அந்த எண்ணத்தை சும்மா விடக்கூடாது.. அதுக்காகவே ஆர்சிபியை தோற்கடிக்க விரும்புவேன்.. கம்பீர் மாஸ் பேட்டி

Gautam Gambhir
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. குறிப்பாக பெங்களூரு அணியை என்னுடைய சொந்த மைதானமான எம் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நிறைந்திருப்பதால் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அதை விட கடந்த வருடம் சண்டை போட்டுக்கொண்ட விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் இப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றனர். அதனால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியை கனவில் கூட விடாமல் எப்போதும் தோற்கடிக்க வேண்டும் என்பதே தம்முடைய விருப்பம் என்று கௌதம் கம்பீர் அதிரடியாக பேசியுள்ளார்.

- Advertisement -

கம்பீர் அதிரடி:
அத்துடன் ஒரு கோப்பையை கூட வெல்லாத பெங்களூரு அணியினர் எப்போதுமே அனைத்தையும் வென்றதைப் போன்ற எண்ணத்தையும் அணுகு முறையையும் கொண்டிருப்பதாக கௌதம் கம்பீர் கூறியுள்ளார். எனவே அது போன்ற அணுகுமுறையை கொண்டவர்களை தோற்கடிப்பதே சிறந்த வழி என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்க விரும்பும் அணி மற்றும் என்னுடைய கனவிலும் நான் வீழ்த்த விரும்பும் ஒரு அணி என்றால் அது பெங்களூரு. பெங்களூரு உயர்மட்ட உரிமையாளருடன் கிறிஸ் கெய்ல், விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் கூடிய ஆடம்பரமான அணி. உண்மையாக அவர்கள் எதையும் வெல்லவில்லை. ஆனால் அவர்கள் எல்லாவற்றையும் வென்றதாக என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான அணுகு முறையால் ஏற்றுக்கொள்ள முடியாது”

- Advertisement -

“மெக்கலம் அடித்த போட்டி, 49க்கு ஆல் அவுட்டான போட்டி, கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோருடன் 6 ஓவரில் 100 ரன்கள் அடித்த போட்டி ஆகிய மூன்றும் பெங்களூருவுக்கு எதிராக கொல்கத்தா பெற்ற மகத்தான வெற்றிகளாகும். அதே சமயம் பெங்களூரு எப்போதும் வலுவான ஆக்ரோசமாக விளையாடக்கூடிய பேட்டிங் வரிசையை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்”

இதையும் படிங்க: தொட்டதெல்லாம் தங்கமாச்சு.. ஜெய்ஸ்வால் பற்றிய மைக்கேல் வாகன் கருத்துக்கு.. அஸ்வின் கரியை பூசும் பதிலடி

“விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் ஆகிய இவர்களை விட வேறு என்ன வேண்டும். எனது கேரியரில் நான் செய்ய விரும்பும் ஒன்று என்றால் அது மீண்டும் மைதானத்திற்கு சென்று பெங்களூருவை வீழ்த்த வேண்டும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் சின்னசாமி மைதானத்தில் விளையாடிய கடைசி 5 போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்து கொல்கத்தா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement