கரியர் முடிவில் விராட் கோலியை விட பாபர் அசாம் 3 – 4 ஆயிரம் ரன்களை அதிகமாக அடிப்பார் – பாக் வீரரின் ஆசை கருத்து

Virat Kohli Babar Azam
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் அதில் வெற்றி பெறுவதற்காக களத்திலும் களத்திற்கு வெளியேவும் மோதிக்கொள்வது வழக்கமான ஒன்றாகும். அதேப்போல் சர்வதேச அரங்கில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை அறிமுகப்படுத்தி உருவாக்கிய பெருமையும் இவ்விரு நாடுகளுக்கும் உள்ளது. இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் என ஏராளமான பேட்ஸ்மேன்களை உருவாக்கிய இந்தியா ஜஹீர் கான் போன்ற குறைவான வேகப்பந்து வீச்சாளர்களையே உருவாக்கியது. மறுபுறம் வாசிம் அக்ரம் போன்ற ஏரளமான தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கிய பாகிஸ்தான் இன்சமாம் உல் ஹக் போன்ற குறைவான தரமான பேட்ஸ்மேன்களை மட்டுமே உருவாக்கியது.

Babar-Azam-and-Virat-Kohli

- Advertisement -

ஆனால் கடந்த 2016இல் அறிமுகமான இளம் வீரர் பாபர் அசாம் பாகிஸ்தான் கண்டெடுத்த ஒரு மகத்தான பேட்ஸ்மேனாக வளரத் துவங்கியுள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 9979 ரன்களையும் 24 சதங்களையும் அடித்துள்ள அவர் அந்நாட்டின் கேப்டனாகவும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் சமீப காலங்களில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அதிலும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகிய உலகின் தரமான “ஃபேப் 4” பேட்ஸ்மேன்களுடன் இணையும் அளவுக்கு சமீப காலங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அற்புதமாக பேட்டிங் செய்து வரும் அவர் நிறைய உலக சாதனைகளையும் படைத்து வருகிறார்.

விராட் ஒப்பீடு:
அதிலும் ஏற்கனவே 70 சதங்கள் அடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள இந்தியாவின் விராட் கோலி அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்து வரும் 2019 முதல் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் அவரின் சாதனைகளை கொஞ்சம் கொஞ்சமாக தூளாக்கி வருகிறார். அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக நீண்ட காலங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியை கடந்த 2021இல் முந்திய பாபர் அசாம் கடந்த மாதம் 1013 நாட்களாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருந்த விராட் கோலியை அதிலும் முந்தியுள்ளார்.

Babar

மொத்தத்தில் கடந்த சில வருடங்களில் விராட் கோலியை மிஞ்சும் அளவுக்கு பாபர் அசாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது உண்மையாகும். அதனால் காலரை தூக்கி விடும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அடிக்கடி விராட் கோலியுடன் ஒப்பிடுவதுடன் அவரை விட பாபர் அசாம் சிறந்தவர் என்று பேசி வருகிறார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தற்சமயத்தில் உச்சத்தில் செயல்பட்டு வரும் பாபர் அசாம் தனது கேரியரை முடிக்கும்போது விராட் கோலியை விட 3 – 4 ஆயிரம் ரன்கள் அதிகமாக அடிக்க விரும்புவதாக பாகிஸ்தான் வீரர் இமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஏராளமான ரன்களையும் 70 சதமடித்துள்ள விராட் கோலி ஒரு ஜாம்பவான் என்று புகழ்ந்துள்ள அவர் பாபர் அசாமை அவருடன் ஒப்பிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

Imam-1

சாதனைகளை உடைக்கணும்:
இருப்பினும் தன்னுடைய கேப்டன் மற்றும் நண்பரான பாபர் அசாம் கிரிக்கெட்டை முடிக்கும்போது விராட் கோலியின் பெரும்பாலான சாதனைகளை உடைத்து அவரை விட அதிகப்படியான ரன்களை அடிக்க விரும்புவதாக தனது ஆசையை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஒரு ஜாம்பவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் 240க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள ஒருவருடன் 80 போட்டிகளில் விளையாடிய ஒருவரை நீங்கள் ஒப்பிட முடியாது. தற்சமயத்தில் அந்த இருவரின் கேரியரை ஒப்பிட்டு பார்த்தால் பாபர் அசாம் முன்னோக்கி உள்ளார்”

“ஆனாலும் என்னுடைய நண்பர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் விராட் கோலியின் நிறைய சாதனைகளை உடைக்க விரும்புகிறேன். இருந்தாலும் அவர்களிடையே தற்போது நிலவும் ஒப்பீடுகள் எனக்கு புரியவில்லை. ஏனெனில் ஒருவர் 10000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். இருப்பினும் அந்த இருவர்களின் கேரியர் முடியும்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலியை விட பாபர் அசாம் குறைந்தது 3 – 4 ஆயிரம் ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என கூறினார்.

Babar-Azam-and-Virat-Kohli

சமீப காலங்களில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் பாபர் அசாம் தற்போது ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் காயம் மற்றும் பார்மை இழக்காமல் இருந்து வருகிறார். ஆனால் கிரிக்கெட் வீரர்களின் வாழ்வில் அந்த இரண்டையும் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்தே தீர வேண்டும். எனவே அந்த இரண்டையும் தாண்டி குறிப்பாக தற்போது விராட் கோலி தவிப்பது போல் மோசமான பார்ம் போன்ற காலங்களையும் தாண்டி பாகிஸ்தானியர்கள் விரும்புவதுபோல் பாபர் அசாம் அவரை முந்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement