டி20 உலககோப்பை தோல்வியின் எதிரொலி முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனிந்து ஹசரங்கா – விவரம் இதோ

Hasaranga
- Advertisement -

வனிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் குரூப் சுற்று போட்டிகளின் முடிவோடு அந்த அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதிலும் குறிப்பாக கத்துக்குட்டியான அமெரிக்கா அணியுடன் இலங்கை அணி பெற்ற தோல்வி அந்த அணியின் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது.

அந்த அளவிற்கு டி20 உலக கோப்பை தொடரில் அவர்கள் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனை தொடர்ந்து நாடு திரும்பிய இலங்கை அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இம்மாத இறுதியில் மோத இருக்கிறது.

- Advertisement -

இதற்கான இந்திய அணி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட்டு இம்மாத இறுதியில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி இந்த தொடரின் முதல் டி20 போட்டி 26 ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி 27ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 1, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் செயல்பட உள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் தொடர் தோல்வி காரணமாக இலங்கை அணியின் கேப்டனாக இருந்த வனிந்து ஹசரங்கா தற்போது டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் : வனிந்து ஹசரங்கா டி20 கிரிக்கெட்டில் இருந்து தனது கேப்டன் பொறுப்பினை ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிங்க : உங்க ரசிகர்களுக்காக.. இதை மட்டும் செஞ்சா விராட் கோலி இந்தியாவையே மறந்துடுவாரு.. அப்ரிடி கோரிக்கை

இலங்கை அணியின் நலம் கருதி அவர் தலைமை பொறுப்பில் இருந்து விலகினாலும் தொடர்ந்து ஒரு வீரராக அணியில் நீடிக்க முடிவு செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு வீரராக என்னால் சிறந்த முயற்சிகளை இலங்கை அணிக்கு எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருப்பேன் நான் எப்போதும் போல் எனது அணிக்கும் புதிதாக வரும் கேப்டனுக்கும் ஆதரவளிப்பேன் என ஹசரங்கா தனது ராஜினாமா அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement