உங்க ரசிகர்களுக்காக.. இதை மட்டும் செஞ்சா விராட் கோலி இந்தியாவையே மறந்துடுவாரு.. அப்ரிடி கோரிக்கை

Shahid Afridi
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடருடன் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.

குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவார்கள் என்பதை ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். இந்த சூழ்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆனால் எல்லைப் பிரச்சனை காரணமாக அந்நாட்டிற்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்தியாவை மறந்துடுவாரு:
மேலும் தங்களுடைய போட்டிகளை இலங்கை அல்லது துபாய் மண்ணில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. சொல்லப்போனால் 2023 ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக அந்நாட்டிற்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கை மண்ணில் விளையாடி வெற்றியும் கண்டது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட பாகிஸ்தானுக்கு விராட் கோலி வர வேண்டும் என முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் அவர்களுக்காகவே வர வேண்டும் என்று அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார். அதை விட பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினால் அங்குள்ள விருந்தோம்பலை பார்த்து விராட் கோலி இந்தியாவையே மறந்து விடுவார் என்றும் அப்ரிடி கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி நியூஸ்24 ஸ்போர்ட்ஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால் அவர் எங்கள் விருந்தோம்பலையும் வரவேற்ப்பையும் பார்த்து இந்தியாவில் இருக்கும் விருந்தோம்பலை மறந்து விடுவார். மேலும் பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எனவே நாங்கள் விராட் கோலி பாகிஸ்தானில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கம்பீர் பயணத்தின் முதல் படி.. இந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட இலங்கை.. விவரம் இதோ

இருப்பினும் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுவதற்கு வாய்ப்பு அதிகமாக இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் பாகிஸ்தானை விட ஐசிசிக்கு இந்தியா தான் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கிறது. அதனால் ஐசிசி இந்தியாவின் பக்கம் சாய்வதற்கே வாய்ப்புள்ளது. எனவே இந்த விவகாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement