ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டில் விளையாடி வருகிறது. அத்தொடரில் பெரும்பாலான சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. அந்தத் தொடர் வரும் ஜூலை 14ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
அதைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதால் விளையாட மாட்டார்கள். அது போன்ற சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்று செய்திகள் காணப்படுகின்றன.
இலங்கை தொடர்:
அதைத் தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க விரும்புகிறது. குறிப்பாக இலங்கை கொஞ்சம் பலவீனமாக காணப்படுவதால் மூத்த விரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்க விரும்புகிறது. எனவே அந்தத் தொடரில் கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக செயல்படுவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன் காரணமாக அந்த தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் 2 தொடருக்கான இந்திய அணியும் விரைவில் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடர்களுக்காக இலங்கை வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையை பிசிசிஐ தங்களுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
அந்த அட்டவணை (இந்திய நேரம்):
ஜூலை 26 இரவு 7 மணி : முதல் டி20, பல்லகேல்
ஜூலை 27 இரவு 7 மணி : 2வது டி20, பல்லகேல்
ஜூலை 29 இரவு 7 மணி : 3வது டி20, பல்லகேல்
ஆகஸ்ட் 1 மதியம் 2.30 மணி : முதல் ஒன்டே, கொழும்பு
ஆகஸ்ட் 4 மதியம் 2.30 மணி : 2வது ஒன்டே, கொழும்பு
ஆகஸ்ட் 7 மதியம் 2.30 மணி : 3வது ஒன்டே, கொழும்பு
இதையும் படிங்க: பும்ராவுக்கு சமமா அவரும் அசத்தலன்னா இந்தியா ஜெயிச்சுருக்காது.. இந்த சான்ஸ் யாருக்கும் கிடைக்காது.. ரமீஸ் ராஜா
இந்த தொடரிலிருந்து தான் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் இந்திய அணியுடன் இணைந்து செயல்பட உள்ளார். அந்த சூழ்நிலையில் 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி இந்தியா வென்றது. எனவே இம்முறையும் இலங்கையை தோற்கடித்து இந்த 2 தொடர்களிலும் இந்தியா வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.