பும்ராவுக்கு சமமா அவரும் அசத்தலன்னா இந்தியா ஜெயிச்சுருக்காது.. இந்த சான்ஸ் யாருக்கும் கிடைக்காது.. ரமீஸ் ராஜா

Ramiz Raza 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. அந்தத் தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றது மறக்க முடியாததாக அமைந்தது.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சரி இறுதிப் போட்டியிலும் சரி தேவைப்பட்ட நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதே போல இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் அவருக்கு நிகராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்றால் மிகையாகாது. சொல்லப்போனால் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

சமமான செயல்பாடு:
இந்நிலையில் என்ன தான் ஒருபுறம் பும்ரா அபாரமாக செயல்பட்டாலும் மறுபுறம் அதற்கு சமமாக அர்ஷ்தீப் பந்து வீசாமல் போயிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். அதே சமயம் தரமான பும்ராவுடன் இணைந்து விளையாடும் போது நன்றாக முன்னேற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த வாய்ப்பு அர்ஷ்தீப்புக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் ரமீஸ் ராஜா இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்த வெற்றியில் அனைத்து இந்திய பவுலர்களும் முக்கிய பங்காற்றினர். சில நேரங்களில் அடி வாங்கினாலும் ஃபிளாட்டான பிட்ச்களில் அவர்கள் நெருக்கமான லைனை வீசி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். அதுவே உங்களுடைய தரம் மற்றும் திறமையை சோதிக்கும். அப்படி பார்க்கும் போது அர்ஷ்தீப் பெயர் முதலாவதாக வரும். பும்ராவிடம் அவரால் கற்றுக்கொள்ள முடியும். பும்ரா இருப்பதால் அழுத்தத்தை உணர முடியாது”

- Advertisement -

“அதே சமயம் பும்ரா அளவுக்கு இல்லையென்றாலும் அதற்கு சமமான செயல்பாடுகளை அவர் வெளிப்படுத்தியாக வேண்டும். அந்த வகையில் தமக்குத்தாமே சவால் விடுவது அர்ஷ்தீப்புக்கு மிகவும் முக்கியமாகும். ஏனெனில் உலகின் சிறந்த பவுலருடன் போட்டியிடும் போது அவரின் பவுலிங் வானத்தைத் தொடும். அவரும் பெரும்பாலான நேரங்களில் வாழ்வா – சாவா சூழ்நிலையில் பந்து வீசினார்”

இதையும் படிங்க: காற்றை வெச்சே 5 பந்தையும் அடிச்சு நொறுக்கி.. ஆஸியை தோற்கடிச்சுட்டாரு.. மிட்சேல் ஸ்டார்க் ஆதங்கம்

“ஒருவேளை அங்கே அவர் சிறப்பாக பந்து வீசாமல் போயிருந்தால் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்ட அவர் தன்னுடைய அணிக்கு நிறைய சாதகத்தை ஏற்படுத்துகிறார். இந்திய அணியில் கடந்த 6 மாதங்களில் திறமையில் முன்னேற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து வருகிறோம். அவர்களின் திறமை உயர்ந்தாலும் இன்னும் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அதையே நீங்கள் அர்ஷ்தீப் பந்து வீச்சில் பார்க்கும் முக்கிய அம்சமாகும்” என்று கூறினார்.

Advertisement