காற்றை வெச்சே 5 பந்தையும் அடிச்சு நொறுக்கி.. ஆஸியை தோற்கடிச்சுட்டாரு.. மிட்சேல் ஸ்டார்க் ஆதங்கம்

Mitcheall Starc
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்றது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் ஆரம்ப முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி கண்டது. குறிப்பாக இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

முன்னதாக ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று அடிக்கடி கௌதம் கம்பீர் சொல்வார். அதை இந்தத் தொடரில் நிறைவேற்றிய காரணத்தாலேயே இந்தியா வென்றது என்று சொல்லலாம். ஆம் இம்முறை செயின் லூஸியா நகரில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் 92 (41) ரன்னில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஸ்டார்க் ஆதங்கம்:
அந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரி 8 சிக்சரை பறக்க விட்ட ரோஹித் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதுகின்றார். குறிப்பாக ஐசிசி தொடரின் கில்லியாக கருத்தப்படும் தரமான மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக 6, 6, 4, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்க விட்ட ரோஹித் சர்மா ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசினார்.

இதன் வாயிலாக ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மாபெரும் சாதனையையும் ரோஹித் படைத்தார். இந்நிலையில் அப்போட்டியில் தாம் 5 பந்துகளை தான் மோசமாக வீசியதாக தெரிவிக்கும் ஸ்டார்க் அந்த 5 பந்துகளையும் ரோஹித் அடித்து நொறுக்கியதாக வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் செய்ண்ட் லூஸியா கிரிக்கெட் மைதானத்தில் காற்றை கணக்கிட்டு ரோகித் அற்புதமாக விளையாடியதாக பாராட்டும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவருக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன். அந்த உலகக் கோப்பையில் குறிப்பாக கடைசிப் பகுதியில் அவர் நன்றாக விளையாடினார். செயின்ட் லூசியாவில் அவர் காற்றைக் குறி வைத்தார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அங்கு ஒரு பகுதியை விட மற்றொரு பகுதியில் அதிக ரன்கள் சென்றது. நான் அந்தப் பகுதியிலிருந்து தான் பந்து வீசினேன்”

இதையும் படிங்க: சேவாக்கால் முடியல.. என்னோட 400 ரன்ஸ் ரெக்கார்டை அந்த 2 இந்திய வீரர்கள் உடைக்க வாய்ப்பிருக்கு.. லாரா நம்பிக்கை

“நான் 5 மோசமான பந்துகளை வீசினேன். அவர் அந்த ஐந்தையும் சிக்ஸர்களாக அடித்தார்” என்று கூறினார். மேலும் அந்த உலகக் கோப்பையின் மற்ற மைதானங்களை விட செயின்ட் லூசியா சிறப்பாக இருந்ததாகவும் ஸ்டார்க் கூறியுள்ளார். அதில் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை கொஞ்சம் தடுமாற்றமாக பேட்டிங் செய்த தங்களை சேசிங் செய்ய விடாமல் இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்தி தோற்கடித்ததாகவும் ஸ்டார்க் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement