சேவாக்கால் முடியல.. என்னோட 400 ரன்ஸ் ரெக்கார்டை அந்த 2 இந்திய வீரர்கள் உடைக்க வாய்ப்பிருக்கு.. லாரா நம்பிக்கை

Brian Lara
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த நூற்றாண்டுகளில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பொதுவாக சாதனைகள் உடைக்கப்படுவதற்காக படைக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அதே போல முந்தைய காலத்தில் விளையாடியவரை விட வருங்காலத்தில் வருபவர்கள் இன்னும் அசத்தலாக விளையாடி சாதனைகளை உடைப்பார்கள். எடுத்துக்காட்டாக கவாஸ்கரை விட சச்சின் அபாரமாக விளையாடி உலக சாதனை படைத்ததை சொல்லலாம்.

ஆனால் இப்போதும் சில சாதனைகள் வருங்காலங்களில் வரும் தரமான வீரர்களால் உடைக்க முடியாமலேயே இருக்கிறது. அந்த வகையில் 400* ரன்கள் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவின் உலக சாதனை இன்னும் உடைக்கப்படாமல் இருக்கிறது. ஆம் கடந்த 2004ஆம் ஆண்டு செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில் போதும் போதும் என்று இங்கிலாந்து சொல்லும் அளவுக்கு வெளுத்து வாங்கிய பிரைன் லாரா 400* ரன்கள் அடித்தார்.

- Advertisement -

லாரா நம்பிக்கை:
அதனால் நூற்றாண்டு வரலாற்றை கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் நிகழ்த்தினார். ஆனால் 20 வருடங்களாகியும் அவருடைய அந்த சாதனை இன்னும் உடைக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் தம்முடைய சாதனையை உடைக்க வீரேந்தர் சேவாக், ஜெயசூர்யா, கிறிஸ் கெயில் நெருங்கியதாக பிரைன் லாரா கூறியுள்ளார்.

இருப்பினும் அவர்களால் முடியாத நிலையில் வரும் காலங்களில் யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் தம்முடைய சாதனையை உடைக்க வாய்ப்புள்ளதாக லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் டெய்லி மெயில் இணையத்தில் பேசியது. “என்னுடைய காலத்திலேயே சில வீரர்கள் அதற்கு சவால் கொடுத்தனர். அல்லது குறைந்தது 300 ரன்கள் கடந்து நெருங்கினார்கள்”

- Advertisement -

“வீரேந்திர சேவாக், இன்சமாம்-உல்-ஹக், சனாத் ஜெயசூர்யா, கிறிஸ் கெயில் ஆகியோரை சொல்லலாம். அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள். அதே போல தற்போது எத்தனை வீரர்கள் அப்படி ஆக்ரோஷமாக விளையாடுகின்றனர்? குறிப்பாக இங்கிலாந்து அணியில் ஹரி ப்ரூக், ஜாக் கிராவ்லி. ஒருவேளை இந்திய அணியில் உடைப்பவர்கள் இருக்கிறார்களா? யசஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில்”

இதையும் படிங்க: பெஞ்சமின் பட்டன் மாதிரி.. எல்லா காலத்திலும் மிரட்டுவாரு.. அவரோட சிறந்த செயல்பாடு இனிமேல் வரும்.. பிரட் லீ 

“ஒருவேளைஅவர்கள் சரியான சூழ்நிலையை கண்டறிந்தால் அந்த இருவருமே சாதனையை உடைப்பார்கள்” என்று கூறினார். முன்னதாக ரோகித் சர்மா அல்லது டேவிட் வார்னர் தன்னுடைய சாதனையை உடைக்க வாய்ப்புள்ளதாக லாரா தெரிவித்தனர். ஆனால் டேவிட் வார்னர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் ரோகித் சர்மா 37 வயதை தாண்டி விட்டார். அதனால் கில், ஜெய்ஸ்வால் ஆகிய அடுத்த தலைமுறை வீரர்கள் 400 ரன்கள் சாதனை உடைக்க வாய்ப்புள்ளதாக லாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement