பெஞ்சமின் பட்டன் மாதிரி.. எல்லா காலத்திலும் மிரட்டுவாரு.. அவரோட சிறந்த செயல்பாடு இனிமேல் வரும்.. பிரட் லீ 

Brett Lee
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. ஜூன் மாதம் அமெரிக்காவில் துவங்கி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நிறைவு பெற்ற அத்தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அசத்திய கடைசி வரை தோற்காமல் சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது.

அந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஃபைனலில் அசத்திய விராட் கோலி ஆகிய அனைவருமே முக்கிய பங்காற்றினர். ஆனால் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

பெஞ்சமின் பட்டன்:
அப்போது 16, 18வது ஓவர்களை வீசிய பும்ரா 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை 4.17 என்ற வரலாறு காணாத எக்கனாமியில் எடுத்த அவர் இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்து தொடர்நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் சிறந்த செயல்பாடுகள் இனிமேல் தான் வரும் என்று ஜாம்பவான் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.

குறிப்பாக பிரபல ஹாலிவுட் கேரக்டர் பெஞ்சமின் பட்டன் போல பும்ரா வருங்காலங்களில் தம்முடைய அனுபவம் மற்றும் வயதால் இன்னும் அசத்தலாக செயல்படுவார் என்று பிரட் லீ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெஞ்சமின் பட்டனின் வயது போல இனிமேல் தான் சிறந்த செயல்பாடு வரும். இந்தக் காலம் மட்டுமின்றி நாங்கள் விளையாடிய காலத்தில் கண்டிப்பாக பும்ரா அசத்தியிருப்பார்”

- Advertisement -

“ஏனெனில் நீங்கள் அவரின் ஸ்டைலையும் மேஜைக்கு என்ன கொண்டு வருகிறார் என்பதை பார்க்க வேண்டும். ஜஸ்ப்ரித் பும்ரா போன்றவரால் புதிய பந்தை வடிவமைக்க முடியும். நல்ல வேகத்தை கொண்டுள்ள அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த லென்த்தை வீச முடியும். அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பவுலிங்கை ஓப்பனிங் செய்யும் அவர் டெத் ஓவரில் அசத்துகிறார்”

இதையும் படிங்க: நான் அவரோட ரசிகன்.. எனக்கே டஃப் கொடுத்தாரு.. உலக கிரிக்கெட்டுக்கு தேவை.. டேல் ஸ்டைன் வெளிப்படை

“டி20 கிரிக்கெட்டில் இப்போதெல்லாம் கடைசிக்கட்ட ஓவர்களில் 12 – 13 ரன்களை கூட சேசிங் செய்வதற்கு உங்களிடம் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால் அவர் அங்கே அற்புதமான யார்க்கர் வீசுகிறார். அவருக்கு எதிராக விளையாடுவது கிட்டத்தட்ட அசாத்தியமாக இருக்கிறது. எனவே அவர் எந்த சகாப்தத்திலும் உலகத்தரம் வாய்ந்தவராக இருந்திருப்பார். அவருடைய கேரியரை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்” என்று கூறினார்.

Advertisement