நான் அவரோட ரசிகன்.. எனக்கே டஃப் கொடுத்தாரு.. உலக கிரிக்கெட்டுக்கு தேவை.. டேல் ஸ்டைன் வெளிப்படை

Dale Styen
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். எனவே அவருக்குப் பதிலாக 2007, 2011 உலகக் கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் அடுத்த பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் 2012, 2014 ஆகிய வருடங்களில் கேப்டனாக கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்ட அவர் இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் பயிற்சியாளராகவும் நல்ல அனுபவத்தை கொண்டிருப்பதன் காரணமாக அவரை அடுத்த பயிற்சியாளராக பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முடிவு இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

பெரிய ரசிகன்:
இந்நிலையில் தாம் கௌதம் கம்பீரின் மிகப்பெரிய ரசிகன் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் கூறியுள்ளார். ஏனெனில் தம்முடைய காலத்தில் தமக்கு கௌதம் கம்பீர் சவாலை கொடுத்த ஒரு இந்திய பேட்ஸ்மேனாக திகழ்ந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். எனவே ஆக்ரோசமாக செயல்படக்கூடிய கௌதம் கம்பீர் இந்திய அணிக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் தேவை என்று ஸ்டைன் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நான் கௌதம் கம்பீரின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஆக்ரோஷத்தை நான் விரும்புகிறேன். அவர் உங்களுக்கு எதிராக கம்பேக் கொடுக்கக்கூடிய நான் எதிர்கொண்ட சில இந்தியர்களில் ஒருவர். அதை நான் விரும்புகிறேன். அவர் விராட் கோலி உள்ளிட்ட இன்னும் சில சீனியர் வீரர்கள் தொடர்ந்து பெரியளவில் விளையாடப் போகாத இந்திய அணியின் உடைமாற்றும் அறையை எடுத்துக் கொள்கிறார்”

- Advertisement -

“அதே சமயம் சீனியர்கள் முழுவதுமாக வெளியேறி விட்டார்கள் என்று நான் சொல்லவில்லை. இந்தியா மட்டுமின்றி உலக கிரிக்கெட்டுக்கும் இது தேவை. குறிப்பாக இந்திய அணிக்கு கொஞ்சம் ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய ஒருவர் தேவை. தற்போது இந்தியா தங்களுடைய ஆட்டத்தை கொஞ்சம் கடினமாகவும் அதிரடியாகவும் விளையாடுகிறது”

இதையும் படிங்க: 3வது ஜிம்பாப்வே போட்டியில் வென்று.. சத்தமின்றி புதிய உலக சாதனையை நிகழ்த்திய இந்தியா

“நாங்கள் அனைவரும் ஐபிஎல் லீக் தொடரில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளோம். அதே சமயம் நாங்கள் அங்கே நண்பராகவும் மாறினோம். களத்தில் மிகுந்த போட்டியை கொடுக்கக்கூடிய கம்பீர் களத்திற்கு வெளியே ஜென்டில்மேனாக இருக்கக்கூடியவர். மிகவும் சாதுரியமான வீரரான அவர் கிரிக்கெட்டை பற்றிய நல்ல மூளையை கொண்டுள்ளார். எனவே இந்திய அணிக்கு அவர் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement