- Advertisement -
ஐ.பி.எல்

என்னுடைய இந்த விக்கெட் செலிப்ரேஷன் ஸ்டைலுக்கு காரணம் இதுதான் – வனிந்து ஹசரங்கா பதில்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய முதலில் விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெடுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

என்னுடைய இந்த விக்கெட் செலிப்ரேஷன் ஸ்டைலுக்கு காரணம் இதுதான் : வனிந்து ஹசரங்கா

பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சி.எஸ்.கே அணியானது ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். குறிப்பாக சென்னை அணியின் முன்னணி வீரர்களான ராகுல் திரிப்பாதி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விக்கெட் வீழ்த்திய பின்னர் ஒரு வித்தியாசமான ஸ்டைலில் அந்த விக்கெட் கொண்டாட்டத்தில் ஹசரங்கா ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது அந்த விக்கெட் செலிப்ரேஷனுக்கு என்ன காரணம்? என்பது குறித்தும் அவர் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியின் போது என்னுடைய அடிப்படை திறனை வைத்துதான் சிறப்பாக செயல்பட்டேன். குறிப்பாக பந்துகளை ஸ்டம்பினை நோக்கி போட்டதாலே விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த போட்டியில் பேட்டிங் செய்ய கூடுதல் சாதகம் இருந்ததால் நான் விக்கெட்டுகளை எடுக்கும் முனைப்புடன் பந்து வீசினேன். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட்டை வீழ்த்தியது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ஒன்று.

இதையும் படிங்க : 20 ரன்கள் வரை கம்மியா அடிச்சும் நாங்க சி.எஸ்.கே வை ஜெயிக்க இதுதான் காரணம் – ரியான் பராக் பேட்டி

விக்கெட் வீழ்த்திய பின்னர் எனது இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் யாதெனில் : இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் நான் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய பழமொழி படங்களை பார்ப்பேன். அதில் புஷ்பா படத்திலிருந்து தான் இந்த ஸ்டைலை எடுத்துக் கொண்டேன் என வனிந்து ஹசரங்கா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -